GV Prakash Youth : “யூடியூப்பில் முட்டை கலக்கி வேட்டை” – 100 மில்லியன் வியூஸை தட்டித்தூக்கிய ஜிவி பிரகாஷ்; மிரட்டலான சாதனை!

தமிழ் சினிமாவோட இசை அசுரன் ஜிவி பிரகாஷ் குமார் இப்போ மியூசிக் மற்றும் ஆக்டிங்னு ரெண்டு குதிரையிலயும் சவாரி செஞ்சுட்டு வராரு. அந்த வகையில 2026-ஓட ஆரம்பத்துல ஜிவி பிரகாஷ் மியூசிக்ல வெளியான ‘முட்டை கலக்கி’ (Mutta Kalaki) பாடல் இப்போ ஒரு இமாலய சாதனையை படைச்சுருக்கு. ‘யூத்’ (Youth) படத்துல இடம்பெற்ற இந்தத் துள்ளலான குத்துப்பாடல் யூடியூப்ல இப்போ 100 மில்லியன் வியூஸை (100M Views) கடந்து மாஸ் காட்டிட்டு வருது. இந்த வருஷத்தோட அதிவேக 100 மில்லியன் பாடல்கள் லிஸ்ட்ல இது டாப் இடத்துல இருக்கு.

Ruling the charts and streams right at number 1 #muttakalakki pic.twitter.com/ZHMpo10u9x

— G.V.Prakash Kumar (@gvprakash) March 28, 2026

இந்தத் தலைமுறை ரசிகர்களுக்கு ஏத்த மாதிரி ஒரு பக்கா லோக்கல் ஃபோக் பீட்ஸை இந்த பாட்டுல ஜிவி பிரகாஷ் குடுத்திருக்காரு. பாட்டு ரிலீஸான முதல் நாள்ல இருந்தே இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மற்றும் ஷார்ட்ஸ்ல இந்த ‘முட்டை கலக்கி’ பாடல் தான் ராஜாவா வலம் வருது. முக்கியமா இந்த பாட்டுல இருக்குற அந்த எனர்ஜியும் ஜிவி பிரகாஷோட வாய்ஸும் பாட்டை வேற லெவலுக்கு கொண்டு போயிருக்கு. எந்த பக்கம் திரும்புனாலும் இந்த பாட்டு தான் இப்போ சவுண்ட் பாக்ஸ்கள்ல அலறுது.

100 மில்லியன் வியூஸை அசால்ட்டா கடந்த ‘முட்டை கலக்கி’ பாடல் 2026-ன் மிகப்பெரிய சார்ட் பஸ்டரா உறுதியாகியிருக்கு.

இந்த பாடலோட மெகா ஹிட்டுக்கு முக்கியமான காரணம் அதோட சிம்பிளான லிரிக்ஸ் மற்றும் கேட்ச்சியான மியூசிக் தான். ‘யூத்’ படத்தோட ப்ரோமோஷனுக்கு இந்த ஒரு பாட்டே மிகப்பெரிய பலமா அமைஞ்சுருக்கு. ஏற்கனவே இந்தப் படத்தோட மத்த பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலைமையில, இந்த முட்டை கலக்கி பாடல் ஒரு இன்டர்நேஷனல் லெவல் வைரல் ஹிட்டா மாறியிருக்கு. ஜிவி பிரகாஷ் தன்னோட கரியர்ல அடுத்தடுத்து பல ஹிட் பாடல்களைக் கொடுத்துட்டே இருக்காரு.

ஜிவி பிரகாஷோட மியூசிக் எப்பவுமே ஒரு தனி வைப் கொடுக்கும். அந்த வகையில இந்த ‘முட்டை கலக்கி’ பாடல் யூத் ஆடியன்ஸை மட்டும் இல்லாம எல்லா வயதினரையும் ஆட வெச்சுருக்கு. படத்தோட ரிலீஸுக்காக இப்போ ரசிகர்கள் ரொம்ப ஆவலா காத்துட்டு இருக்காங்க. இந்தச் சாதனையை ஜிவி பிரகாஷ் ரசிகர்கள் சோசியல் மீடியாவுல ஹேஷ்டேக் போட்டு கொண்டாடிட்டு வராங்க. இந்த வருஷத்தோட மியூசிக் அவார்டுகள்ல இந்தப் பாட்டுக்கு கண்டிப்பா இடம் உண்டுன்னு இப்போவே பேச ஆரம்பிச்சுட்டாங்க.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.