செண்பகமே செண்பகமே டு செப்டம்பர் மாதம்: PAN இந்தியா பாடகி ஆஷா போஸ்லேவின் தமிழ் ஹிட்ஸ்

1970, 80-களில் இந்திய இசை உலகில் உச்சத்தில் இருந்தவர் பாடகி ஆஷா போஸ்லே. இன்று இயற்கை எய்தியிருக்கிறார்.

இதுவரை 20,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ள ஆஷா போஸ்லேயின் கடைசி பாடல் கடந்த பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆனது.

பான் இந்திய பாடகியான இவர் தமிழ் திரைப்படங்களில் பாடாமலா இருந்திருப்பார். தமிழ் திரைப்படங்களில் இவர் பாடி ஹிட்டான பாடல்களில் லிஸ்ட்டைப் பார்க்கலாம்.
ஆஷா போஸ்லே

1987-ம் ஆண்டு நடிகர்கள் ராமராஜன் மற்றும் ரேகா நடிப்பில் வெளியான எங்க ஊரு பாட்டுக்காரன் திரைப்படத்தில் வரும் பெண் வெர்ஷன் செண்பகமே செண்பகமே பாடல் இவரது குரல் தான்.

இரவு நேரங்களில் பலரின் பிளே லிஸ்ட்டில் ஒலிக்கும் ஹே ராம் திரைப்படத்தின் நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி பாடல் ஆஷா போஸ்லே பாடியது ஆகும்.

இருவர் திரைப்படத்தில் வரும் மோகன்லால் - ஐஸ்வர்யா ராய் காம்போவின் வெண்ணிலா வெண்ணிலா பாடல் ஆஷா போஸ்லேவின் இனிய குரல் தான்.

இன்று வரை பேச்சிலர் பார்ட்டிகளில் இசைக்கப்படும் அலைபாயுதே திரைப்படத்தில் வரும் செப்டம்பர் மாதம் பாடல் ஆஷா போஸ்லே உடையது தான்.

சந்திரமுகி பேய் படத்தில் வரும் மெலடி பாடலான கொஞ்ச நேரம் கொஞ்ச நேரத்தின் பெண் குரல் ஆஷா போஸ்லேயின் மெல்லிசை குரல் ஆகும்.

சில மாதங்களுக்கு முன், தமிழ்நாடு முழுவதும் டிரெண்ட் ஆன, நேருக்கு நேர் திரைப்பட பாடல், எங்கெங்கே ஆஷா போஸ்லே பாடியதாகும்.

நடிகர் விக்ரமின் ஒன் ஆஃப் தி மறக்கமுடியாத ஹிட் பாடலான ஓ பட்டர்பிளை பாடல் ஆஷா போஸ்லேவின் குரல் ஆகும்.

ஆஷா போஸ்லே பாடிய பாடல்களில் உங்களுக்கு பேவரைட்டாக பாடலை கமென்ட்டில் பதிவிடுங்கள்!

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.