ஜனநாயகன்: விஜய் சாரை கடைசி முறையாக திருவிழா போல் கொண்டாட வேண்டாமா?- பூஜா ஹெக்டே ஆதங்கம்

விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த படம் விஜய்யின் கடைசி படம் என்பதால், மக்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பு நிலவி இருந்தது.

ஆனால், சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் படத்தின் ரிலீஸ் தாமதமானது.

ஜனநாயகன்

இந்நிலையில் நேற்று முன்தினம் (ஏப்ரல்.9) இணையத்தில் முழு படமும் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.

திரைத்துறையைச் சேர்ந்த பலரும் இதற்கு எதிராகக் குரல் கொடுத்து வருகின்றனர்.

அந்தவகையில் ஜனநாயகன் படத்தில் நடித்த பூஜா ஹெக்டேவும் படம் இணையத்தில் வெளியானதற்கு எதிராக குரல் கொடுத்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில் , " நமது திரைப்படம் இணையத்தில் கசிந்திருப்பது எனக்கு மட்டுமல்ல, இதற்காக உழைத்த ஒவ்வொருவருக்கும் மிகுந்த மனவேதனையைத் தருகிறது.

இது வெறும் வசூல் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல, இந்தப் படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு நடிகருக்கும் தொழில்நுட்ப கலைஞருக்கும் கிடைக்க வேண்டிய மரியாதையைப் பறிப்பதாகும்.

பூஜா ஹெக்டே
பூஜா ஹெக்டே

அதுமட்டுமில்லாமல் விஜய் சாரை கடைசி முறையாக ஒரு திருவிழாவைப் போல நாம் அனைவரும் ஒன்றாகக் கூடி, பெரிய திரையில் கொண்டாடி மகிழ வேண்டாமா?

திருட்டுத்தனமாகப் பார்ப்பதை ஊக்குவிக்க வேண்டாம். அப்போதுதான் சினிமாவும் கலையும் வாழும்" என்று பதிவிட்டிருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.