உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?!.. ஆய்வில் தகவல்!..


மாறிவரும் நவீன காலத்தில் மனிதர்களுக்கு அவசியமான தூக்கமே மாறிவிட்டது. அதாவது தூக்கத்தின் அருமையும், பெருமையும் அதன் முக்கியத்துவத்தையும் பலரும் மறந்து விட்டனர் அல்லது தெரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள். குறிப்பாக இன்றைய இளைஞர்கள் 7 மணி நேரம் கூட தூங்குவதில்லை.

முன்பெல்லாம் குறைந்தபட்சம் 8 மணி நேரம் எல்லோரும் சரியாக தூங்கினார்கள். உடலும் ஆரோக்கியமாக இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் 5 மணி நேரம், 6 மணி நேரம், 4 மணி நேரம் என தூக்கத்தின் அளவு சுருங்கி விட்டது.. அதிலும் தற்போது இளைஞர்கள் அதில் குறிப்பாக ஐடி துறையில் வேலை செய்பவர்கள் இரவு முழுவதும் வேலை செய்துவிட்டு பகலில் தூங்குகிறார்கள். வாழ்க்கை முறையால் மனிதர்களுக்கு தேவையான தூக்கமும் பறிபோய்விட்டது..

சரியான தூக்கம்தான் உடலுக்கு தேவையான வளர்ச்சிக்கு உதவும் என மருத்துவவர்கள் சொல்கிறார்கள். ஆனால், இதை யாரும் புரிந்து கொள்வதில்லை.. இந்நிலையில்தான் ஒரு சர்வதேச அமைப்பு ஒன்று சமீபத்தில் இளம் வயது ஆண் மற்றும் பெண்களிடம் ஓரு ஆய்வை நடத்தியது.

அந்த ஆய்வில் குறைந்தபட்சம் ஏழு மணி நேரம் தூங்குபவர்களுக்கு உடல்நிலை சிறப்பாக இருப்பதாகவும் அவர்கள் இதயத்துடிப்பு சீராக இருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது.
அதோடு 7 மணி நேரம் தூங்குபவர்கள் கல்வியிலும் சிறந்த மாணவர்களாக இருக்கிறார்கள்.. எனவே இளம் வயதினர் உடலுக்கு தேவையான வளர்ச்சியை பெற  தேவையான நேரம் தூங்கவேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கிறார்கள்..

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.