சல்மான் கான், யாஷ், மோகன்லால், மம்மூட்டி, நிவின்பாலி.! மாஸ் ஹீரோக்களுடன் அசத்தும் நயன்தாரா லைன்அப்
இந்திய சினிமாவில் 23வது ஆண்டை கொண்டாடிக் கொண்டிருக்கிறார் நயன்தாரா. கடந்த 2003ல் மலையாளத்தில் சத்யன் அந்திக்காடின் மனசினக்கரே மூலம் அறிமுகமானவர் 23 ஆண்டுகளுக்கு பிறகும் ஹீரோயினாக பட்டொளிவீசி பறக்கிறார்.
சல்மான் கான், பாலகிருஷ்ணா, மம்மூட்டி, மோகன்லால், யாஷ், நிவின்பாலி என பலரின் படங்களில் பிசியாக இருக்கிறார். சினிமாதான் என்னுடைய வாழ்க்கையாக மாறிவிடும் என்று எனக்குத் தெரியாது. ஒவ்வொரு ஃப்ரேமும், ஒவ்வொரு காட்சியும் இன்று என்னை செதுக்கி இருக்கிறது. சினிமாவுக்கு நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்" என்று நெகிழ்ச்சியாக சொல்லும் நயன்தாராவின் லைன் அப் குறித்த அப்டேட் இது.
தமிழை தவிர இதர மொழிகளில் ஹீரோக்களுடன் நடித்து வரும் நயன்தாரா, தமிழில் ஹீரோயின் சென்ட் ரிக்கில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். மூக்குத்தி அம்மன்2, மண்ணாங்கட்டி சின்ஸ் 1960, ராக்காயி ஹாய் இவை எல்லாமே ஹீரோயின் சென்ட்ரிக் தான்.
மூக்கத்தி அம்மன் 2வை சுந்தர்.சி இயக்கி முடித்துவிட்டார். ஃபேன்டஸி படம் என்பதால் கிராபிக்ஸ் வேலைகள் நடந்து வருகிறது. ஹாய் படத்தில் நயன்தாராவுடன் கவின், பாக்யராஜ், பிரபு, ராதிகா என சீனியர்கள் பலர் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. முதல் சிங்கிள் மே முதல் வாரத்தில் வருமென எதிர்பார்க்கப்படுகிறது. யாரடி நீ மோகினி போல இது ஒரு காதல் கதை என்கிறார்கள்.

கார்த்தியின் சர்தார் 2வை தயாரித்திருக்கும் நிறுவனம் தான் மண்ணாங்கட்டி சின்ஸ் 1960 படத்தையும் தயாரித்துள்ளது. யூடியூப்பர் டியூட் விக்கி இயக்கியிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்து முடிந்திருக்கிறது. யோகிபாபு, தேவதர்ஷினி, கௌரி கிஷன் என பலரும் நடித்துள்ளனர். விரைவில் இதன் அப்டேட்களை எதிர்பார்க்கலாம்.
ஹீரோயின் சென்ட் ரிக்கான ராக்காயியை செந்தில் நல்லசாமி இயக்கி வருகிறார். பீரியட் படமான இப்படமும் நயனின் லைனப்பில் உள்ளது.
மலையாளத்தில் மம்மூட்டி, மோகன்லால் பகத்பாசில் உள்பட பல டாப் ஹீரோக்கள் இணைந்து நடித்துள்ள பேட்ரியாட் படம் ரெடியாகிவிட்டது. கமலின் விஸ்வரூபம் 2 படத்தின் எடிட்டரான மகேஷ் நாராயணன், இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இதற்கு முன் மலையாளத்தில் திரைக்கதை, படத்தொகுப்பு, டைரக்ஷன் என பணியாற்றியவர். பேட் ரியாட் மே முதல் தேதியன்று வெளியாகிறது. இது தவிர நிவின்பாலியோடு டியர் ஸ்டுடன்ட்ஸ் என்ற படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். அறிமுக இயக்குநர்கள் ஜார்ஜ் பிலிப் ராய், சந்திப் குமார் இயக்கியிருக்கும் இந்த படத்தை நிவின்பாலி தனது நண்பர்களோடு இணைந்து தயாரித்திருக்கிறார்.

கன்னடத்தில் கே.ஜி.எஃப் யாஷ்ஷுடன் டாக்ஸிக் படத்தில் கங்காவாக வருகிறார் நயன். விஜய்யின் ஜனநாயாகன் படத்தை தயாரித்திருக்கும் கே.வி.என் நிறுவனம் தான் டாக்ஸிக்கையும் தயாரித்துள்ளது. பான் இந்தியப்படமாக மிகப்பிரமாண்டமாக உருவாகியிருக்கும் இப்படத்தின் வி.எஃப்.எக்ஸ்.வேலைகள் பெங்களூருவில் ஜரூராக நடந்து வருகிறது. இப்படம் ஜூன் 4ம் தேதி திரைக்கு வருகிறது.
தெலுங்கில் பாலகிருஷ்ணாவோடு நான்காவது முறையாக கைக்கோர்த்திருக்கிறார். பாலகிருஷ்ணாவின் 111வது படத்தின் அறிவிப்பில் பேரரசிற்கு ராணி வந்துவிட்டார் என அவர் கமிட் ஆனதை அறிவித்தனர். சென்ற நவம்பரில் தொடங்கப்பட்ட இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் மும்முரமாக நடந்து வருகிறது. இதற்கு முன் பாலகிருஷ்ணாவோடு ‘ஸ்ரீராம ராஜ்ஜியம்’சிம்ஹா, ஜெய் சிம்ஹா ஆகிய படங்களில் பாலகிருஷ்ணாவோடு நடித்திருக்கிறார். பாலிவுட்டில் ஷாரூக்கானின் ஜவான் படத்திற்கு பிறகு இப்போது சல்மான்கானோடு ஜோடி சேருகிறார். விஜய்யை வைத்து வாரிசு படத்தை இயக்கிய வம்சி இப்படத்தை இயக்குகிறார். விரைவில் இதன் படப்பிடிப்பு மும்பையில் தொடங்குகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

