Jana Nayagan: இது மன்னிக்க முடியாதது - ஜனநாயகன் படக்காட்சிகள் கசிந்ததற்கு சூர்யா கண்டனம்

விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் இந்த ஆண்டு ஜனவரி மாதமே வெளியாகுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், சென்சார் சான்றிதழ் கிடைக்காததனால் படத்தின் ரிலீஸ் தடைப்பட்டது.

ஜனநாயகன் திரைப்படம்

நேற்று இரவு, ஜனநாயகன் படத்தின் சில காட்சிகள் இணையத்தில் லீக் ஆனது. இது ரசிகர்களையும், படக்குழுவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

இந்நிலையில், திரைத்துறையைச் சேர்ந்த பலரும் இப்படியான பைரசியை ஒழிக்க வேண்டும் எனக் குரல் கொடுத்து வருகிறார்கள்.

நடிகர் சிரஞ்சீவி, "ஜனநாயகன் திரைப்படத்தின் காட்சிகள் இணையத்தில் கசிந்திருப்பது என்னை ஆழமாகக் கவலைப்படுத்துகிறது.

சினிமா என்பது நம்பிக்கை, உழைப்பு மற்றும் பலரின் கூட்டுக் கனவுகளால் உருவாக்கப்படுகிறது.

இத்தகைய சம்பவங்கள் தொழில்துறையில் உள்ள அனைவரையும் பாதிக்கின்றன. உழைப்பைப் பாதுகாப்பது எவ்வளவு முக்கியம் என்பதை இது நினைவூட்டுகிறது.

சினிமாவை மதிக்கவும் பாதுகாக்கவும் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். பைரசியை ஒழியுங்கள். சினிமாவைக் காப்பாற்றுங்கள்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Heartbreaking and unfair — an entire team’s passion reduced to this. I request you all with honesty, please don’t watch, share, or discuss the film here. Respect their work. I stand with my friends and condemn the act, it’s unforgivable! #JanaNayagan

— Suriya Sivakumar (@Suriya_offl) April 10, 2026

ஜனநாயகன் படத்தின் காட்சிகள் இணையத்தில் கசிந்திருப்பது பற்றி நடிகர் சூர்யா, "ஒரு முழு குழுவினரின் ஆர்வமும், உழைப்பும் இப்படி ஆக்கப்பட்டிருப்பது மனதை உடைக்கும் வகையிலும், நியாயமற்றதாகவும் இருக்கிறது.

நான் உங்களிடம் உண்மையுடன் கேட்டுக்கொள்கிறேன், தயவுசெய்து இந்தப் படத்தை இங்கே பார்க்காதீர்கள், பகிர்ந்துகொள்ளாதீர்கள், அல்லது விவாதிக்காதீர்கள்.

அவர்களின் உழைப்பை மதியுங்கள். நான் என் நண்பர்களுடன் நிற்கிறேன். இந்தச் செயலைக் கண்டிக்கிறேன், இது மன்னிக்க முடியாதது" எனப் பதிவிட்டிருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.