தங்கம், வெள்ளி விலை இன்று திடீர் உயர்வு.. இன்று ஒரே நாளில் தங்கம் ரூ.1000 அதிகம்..!
தமிழகத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் இன்று அதிரடியான உயர்வு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை, இன்று மீண்டும் ஏறுமுகத்தில் உள்ளது. இன்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 14,125 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,13,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இது நேற்று இருந்த விலையை விட சவரனுக்கு 1,000 ரூபாய் கூடுதலாகும்.
அதேபோல், 24 கேரட் தூய தங்கம் ஒரு கிராம் 15,409 ரூபாயாகவும், ஒரு சவரன் 1,23,272 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. ஏப்ரல் 9-ம் தேதி சவரன் 1,12,000 ரூபாயாக இருந்த ஆபரணத் தங்கம், ஒரே நாளில் கணிசமான உயர்வை சந்தித்துள்ளது முதலீட்டாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளி விலையைப் பொறுத்தவரை, இன்று கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து 265 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை 2,65,000 ரூபாயாக உள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் தேவையை பொறுத்தே இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
Edited by Siva
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.