Vignesh Shivan’s Clean Rule : “மது, சிகரெட்டுக்கு நோ” – சென்சாரே பாராட்டிய விக்கி! சூர்யா படத்திலும் அதே பாலிசி!

கோலிவுட்டின் ஜாலி இயக்குநர் விக்னேஷ் சிவன், தனது படங்கள் என்றாலே கலர்ஃபுல்லாகவும், பாசிட்டிவாகவும் இருக்கும் எனப் பெயர் எடுத்தவர். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய அவர், தனது சினிமா பயணம் குறித்து ஒரு சுவாரசியமான மற்றும் ஆச்சரியமான தகவலைப் பகிர்ந்துள்ளார். பொதுவாகப் படங்களில் வரும் ‘புகைப்பிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும்’ அல்லது ‘மது அருந்துதல் உடல்நலத்திற்குத் தீங்கானது’ என்ற எச்சரிக்கை அட்டைகள் தனது படங்களில் இருக்காது என அவர் கூறியுள்ளார்.

இதற்குக் காரணம், அவரது படங்களில் ஹீரோக்கள் யாருமே திரையில் புகைப்பிடிப்பதோ அல்லது மது அருந்துவதோ கிடையாது. “எனது படங்களில் ஹீரோக்களுக்கு அப்படி ஒரு பழக்கமே இருக்காது, அதனால் அந்த எச்சரிக்கை கார்டுகள் போட வேண்டிய அவசியமே வருவதில்லை” என விக்கி கெத்தாகத் தெரிவித்துள்ளார். இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

குறிப்பாக, ‘நானும் ரவுடி தான்’ திரைப்படம் முழுவதுமாகப் பாண்டிச்சேரியில் படமாக்கப்பட்டது. பாண்டிச்சேரி என்றாலே பல படங்களில் மதுக்கடைகளைக் காட்டுவார்கள். ஆனால், அந்தப் படத்தில் ஒரு காட்சியில் கூட மது அருந்தும் காட்சியை விக்கி வைக்கவில்லை. பாண்டிச்சேரியில் எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும் ஒரு சொட்டு மது கூடக் காட்டாதது தான் விக்கியின் ஸ்பெஷல். இதற்காகச் சென்சார் போர்டு அதிகாரிகள் அவரை நேரில் அழைத்துத் தனியாகப் பாராட்டியுள்ளார்களாம். அதேபோல், நடிகர் சூர்யா நடித்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்திலும் ஹீரோ புகைப்பிடிக்கும் அல்லது மது அருந்தும் காட்சிகள் எதுவுமே இடம்பெறவில்லை.

Actor Suriya from the movie Thaanaa Serndha Koottam directed by Vignesh Shivan.
‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் புகைப்பிடிக்கும் காட்சிகள் இல்லாமல் நடித்த சூர்யா.

மேலும், ரத்தம் தெறிக்கும் வன்முறைக் காட்சிகளையும் தான் அதிகம் விரும்புவதில்லை என்றும், கதைக்குத் தேவையென்றால் மட்டுமே மிகக் குறைந்த அளவில் ரத்தத்தைப் பயன்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். விக்னேஷ் சிவனின் இந்தப் பண்பு, குடும்பத்துடன் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரு பெரிய நிம்மதியைத் தந்துள்ளது. சமூகப் பொறுப்புணர்வுடன் ஒரு கமர்சியல் இயக்குநராக அவர் செயல்படுவது கோலிவுட்டில் ஒரு புது மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.

திரையில் ஹீரோக்கள் செய்யும் செயல்கள் இளைஞர்களைப் பாதிக்கும் என்பதால், விக்கி கடைபிடிக்கும் இந்த ‘நோ ஸ்மோக்கிங், நோ ஆல்கஹால்’ பாலிசி உண்மையிலேயே பாராட்டுக்குரியது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.