LIK: அனிருத் நடிக்க வேண்டிய படம் அது!- ஆர்.ஜே பாலாஜி ஷேரிங்ஸ்
விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK திரைப்படம், வருகிற ஏப்ரல் 10-ம் தேதி வெளியாக இருக்கிறது.
டிராகன், லவ் டுடே, டூட் படங்களைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்.
அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, சீமான் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் நேற்று (ஏப்ரல்.7) சென்னையில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய ஆர்.ஜே பாலாஜி, "எனக்கும், அனிருத்துக்கும் இந்த LIK படத்துடன் ஒரு சம்பந்தம் இருக்கிறது. இந்தப் படத்தில் ஒரு பாடல் இருக்கும். AAKKO ஆல்பம் பாடலில் இருந்து அந்தப் பாடலை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
AAKKO படத்தில் அனிருத் ஹீரோவாக நடிக்க வேண்டியது, அவரும், நானும் நடிப்பதற்காக அவசர அவசரமாக முடியெல்லாம் வெட்டிவிட்டோம். அந்தப் படத்தின் தயாரிப்பாளர் எங்களைப் பார்த்துவிட்டு 2 லட்ச ரூபாய்க்கு செக்கெல்லாம் எழுதிக்கொடுத்தார்.
உடனே நான் அந்தப் பணத்தை என் மகன் பிறந்தநாளுக்காகப் பயங்கரமாக செலவு செய்துவிட்டேன். ஆனால் 10 நாள்கள் கழித்து அனிருத் அந்தப் படத்தில் நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டார்.
2 லட்ச ரூபாய் என்பது அப்போது பெரிய பணம். அந்தப் பணத்தை நாம் இப்போது தயாரிப்பாளருக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என நினைத்து போன் செய்தேன். பாதிப் பணத்தை இப்போது தருகிறேன். மீதி பணத்தை கொஞ்ச நாளில் கொடுத்துவிடுகிறேன் என சொன்னேன்.

ஆனால் எனக்கான பணத்தையும் சேர்த்து அனிருத்தே கொடுத்துவிட்டதாக தயாரிப்பாளர் சொன்னார். அனிருத்திடம் கேட்டபோது உங்கள் பையனுக்கு என்னுடைய பிறந்தநாள் பரிசாக வைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார். அப்போது இருந்தே அவர் எனக்கு தம்பி மாதிரி" என்று அனிருத் குறித்து பகிர்ந்திருக்கிறார்.
தொடர்ந்து கருப்பு படம் குறித்து பேசிய அவர், "தமிழ் புத்தாண்டிற்குள் ‘கருப்பு படத்தின் அடுத்த பாடல் வெளியாகும். LIK படத்தில் விக்னேஷ் சிவன் B.E செய்தார் என்றால் கருப்பு படத்தில் நான் B.Sc செய்துள்ளேன்.
மூன்று வருடமாக உழைத்து படம் இப்போது வெளியாக போகிறது. கோடை விடுமுறைக்கு எல்லாரையும் மகிழ்விக்கக் கூடிய படமாக கருப்பு இருக்கும்" என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

