Sivakarthikeyan x Tamilarasan : லப்பர் பந்து இயக்குநருடன் இணையும் எஸ்கே – ரெட் ஜெயன்ட் போடும் மெகா பிளான்!
தமிழ் சினிமாவில் தற்போது மோஸ்ட் வான்டட் இயக்குநராக மாறியிருக்கிறார் ‘லப்பர் பந்து’ புகழ் தமிழரசன் பச்சைமுத்து. தனது முதல் படத்திலேயே எமோஷன் மற்றும் கிரிக்கெட்டை கலந்து கட்டி ஹிட் கொடுத்த இவருடன் இணைய டாப் ஹீரோக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் இப்போது சிவகார்த்திகேயன் மற்றும் தமிழரசன் பச்சைமுத்து கூட்டணி அமையவுள்ளதாகக் கோலிவுட் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபடுகின்றன.
இந்தப் படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பிரம்மாண்டமாகத் தயாரிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. லப்பர் பந்து படத்தை ரெட் ஜெயன்ட் தான் விநியோகம் செய்திருந்தது, அந்தப் படத்தின் மேக்கிங் அவர்களுக்குப் பிடித்துப் போனதால் இந்த மெகா கூட்டணியை அவர்கள் ஒருங்கிணைப்பதாகத் தெரிகிறது. தற்போது இதற்கான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

தற்போது தனுஷின் 56-வது படத்தை இயக்கும் பணிகளில் தமிழரசன் பச்சைமுத்து படு பிஸியாக உள்ளார் மற்றும் தனுஷ் படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் வேலைகளில் தமிழரசன் இறங்கிவிட்டார். அந்தப் படத்தை முடித்த பிறகுதான், சிவகார்த்திகேயன் படத்திற்கான வேலைகளை அவர் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தனுஷ் மற்றும் எஸ்கே என அடுத்தடுத்து கோலிவுட்டின் டாப் ஸ்டார்களை வைத்துத் தமிழரசன் படம் இயக்குவது அவரது கேரியரில் ஒரு பெரிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
தமிழரசன் பச்சைமுத்துவுடனான இந்தப் புதிய கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

