Vishnu Vishal Irandu Vaanam : ராட்சசன் காம்போ வந்தாச்சு – சம்மர் ரிலீஸ் கன்பார்ம்!

விஷ்ணு விஷால் மற்றும் இயக்குனர் ராம்குமார் கூட்டணியில் உருவாகியுள்ள ‘இரண்டு வானம்’ திரைப்படம் 2026 கோடை விடுமுறைக்கு திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. முண்டாசுப்பட்டி மற்றும் ராட்சசன் என தமிழ் சினிமாவில் இரண்டு மாபெரும் ஹிட் படங்களை கொடுத்த இந்த வெற்றி கூட்டணி, சுமார் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இந்த முறை ஒரு சீரியஸ் த்ரில்லராக இல்லாமல், ஒரு அழகான ரொமாண்டிக் ஃபேண்டஸி எமோஷனல் டிராமாவாக இந்தப் படம் உருவாகியுள்ளது.

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டே சுமார் 150 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று முடிவடைந்தது. இந்தப் படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ‘பிரேமலு’ புகழ் மமிதா பைஜு நடித்துள்ளார். விஷ்ணு விஷால் தனது முந்தைய ஹிட் படங்களைப் போலவே இதிலும் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Actor Vishnu Vishal and Director Ramkumar of Ratsasan fame reuniting for their 3rd film Irandu Vaanam.
மூன்றாவது முறையாக இணையும் விஷ்ணு விஷால் – ராம்குமார் கூட்டணியின் ‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்.

 

ராட்சசன் படத்திற்குப் பிறகு பல கதைகளைச் செதுக்கி வந்த ராம்குமார்… இந்த ‘இரண்டு வானம்’ கதையை மிகவும் நுணுக்கமாகத் தயார் செய்துள்ளாராம். இரண்டு வெவ்வேறு உலகங்களுக்கு இடையே நடக்கும் உணர்ச்சிகரமான காதலை ஃபேண்டஸி கலந்து சொல்லப்போகும் இந்தப் படம், கோலிவுட்டில் ஒரு புதுவிதமான அனுபவத்தைத் தரும் என கோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன. தற்போது விஷ்ணு விஷால் சமூக வலைதளங்களில் இருந்து ஒரு சிறு இடைவெளி எடுத்துக்கொண்டுள்ள நிலையில், அவர் திரும்பும்போது இந்தப் படத்தின் அடுத்தகட்ட அப்டேட்கள் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சம்மர் 2026 ரிலீஸை குறிவைத்துள்ள இந்தத் திரைப்படம்… குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. விஷ்ணு விஷால் மற்றும் ராம்குமார் காம்போ இதுவரை தோற்றதே இல்லை என்பதால், ஹாட்ரிக் வெற்றிக்காக ரசிகர்கள் இப்போதே சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்யத் தொடங்கிவிட்டனர். இரண்டு வானங்களுக்குக் கீழே விஷ்ணு விஷால் – மமிதா பைஜுவின் ரொமான்டிக்கை  காண இன்னும் சில மாதங்களே காத்திருக்க வேண்டும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.