Vishal Proud Moment : ஆந்திரா கிராமத்தில் ‘யூத்’ போஸ்டர் – கென் கருணாஸை பாராட்டிய விஷால்!

கென் கருணாஸ் இயக்கி நடித்துள்ள ‘யூத்’ படம் ரிலீஸாகி இப்போ பாக்ஸ் ஆபீஸ்ல செம்ம வசூல் செஞ்சுட்டு வருது. குறிப்பா தெலுங்கு ஆடியன்ஸ் மத்தியில இந்த எமோஷனல் படம் பெரிய கனெக்ட் கொடுத்திருக்கு. தமிழ் மற்றும் தெலுங்கு என ரெண்டு மொழிகளிலுமே இந்த படம் இளைஞர்கள் கிட்ட பெரிய வரவேற்பை பெத்திருக்குது

ஆந்திராவில் இருக்குற ஒரு சின்ன கிராமத்தில கூட ‘யூத்’ படத்தோட போஸ்டர் இருக்குறத பாத்தப்ப எனக்கு நிஜமாவே ரொம்ப பெருமையா இருந்துச்சு. ஒரு தமிழ் படம் தெலுங்குல இவ்வளவு தூரம் போயிருக்கிறது ரொம்ப பெரிய விஷயம். இந்த நேரத்துல கென் கருணாஸ் மாதிரி எங்ஸ்டர்ஸ் முன்னுக்கு வர்றது பாக்க ரொம்ப சந்தோஷமா இருக்கு என விஷால் உருக்கமாக பேசியிருக்கார்.

இந்த வெற்றியின் பின்னணியில் ஜிவி பிரகாஷ் ஒரு மிகப்பெரிய தூணாக இருந்துள்ளார் என விஷால் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

Actor Vishal appreciating music director GV Prakash for the success of Youth movie in Andhra.
ஆந்திரா கிராமங்களில் ‘யூத்’ படத்தின் வரவேற்பைப் பார்த்து ஜிவி பிரகாஷை நடிகர் விஷால் பாராட்டியுள்ளார்.

 

ஜிவி பிரகாஷ் இந்தப் படத்துக்காக போட்ட உழைப்பு வேற லெவல். அவர் தான் இந்த படத்தோட ஸ்ட்ராங் பில்லர். கென் கருணாஸ் இந்த அளவுக்கு சாதிக்கிறதுக்கு ஜிவி கொடுத்த சப்போர்ட் ரொம்ப முக்கியமானது என விஷால் பாராட்டியுள்ளார். மியூசிக் மட்டும் இல்லாம ஒரு நல்ல சினிமாவை மக்கள்கிட்ட கொண்டு போறதுலயும் ஜிவி கில்லியா இருக்காருனு விஷால் சொல்லியிருக்காரு.

இந்த செய்தியை விஷால் பகிர்ந்ததும் இப்போ சோஷியல் மீடியால கென் கருணாஸ் மற்றும் யூத் டீமுக்கு வாழ்த்துகள் குவியுது.

Actor Vishal congratulating GV Prakash and director Ken Karunas for the success of Youth movie in Andhra.
‘யூத்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து ஜிவி பிரகாஷ் மற்றும் படக்குழுவினருக்கு விஷால் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

சினிமால ஒரு சின்ன கேப் கிடைச்சாலும் அதுல டேலன்ட் இருக்குற ஆட்களை சப்போர்ட் பண்ணனும்ங்கிற விஷாலோட இந்த குணம் ரசிகர்களை கவர்ந்துருக்கு. ஜிவி பிரகாஷ் – கென் கருணாஸ் கூட்டணிக்கு இந்த வெற்றி ஒரு பெரிய மைல்கல்லா அமையும்னு சினிமா வட்டாரத்துல பேசிக்கிறாங்க.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.