இன்னும் கொஞ்சம் இறங்கினால் 1 லட்சத்திற்கு கீழே வந்துவிடும் ஒரு சவரன் தங்கம்.. தொடர் சரிவு..!
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்து நகைப்பிரியர்களுக்கு ஆறுதல் அளித்துள்ளது.
கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, இன்று சற்று சரிவைக் கண்டுள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 13,810 ரூபாய்க்கும், ஒரு சவரன் 110,480 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு சவரன் 111,600 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று சவரனுக்கு 1,120 ரூபாய் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், 24 கேரட் சுத்தத் தங்கம் ஒரு கிராம் 15,065 ரூபாய்க்கும், ஒரு சவரன் 120,520 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. கடந்த வார தொடக்கத்தில் அதாவது ஏப்ரல் 01 அன்று சவரன் 122,616 ரூபாய் என்ற உச்சத்தை தொட்ட நிலையில், தற்போது விலை படிப்படியாக குறைந்து வருவது முதலீட்டாளர்களுக்கு சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது.
வெள்ளி விலையில் இன்று மாற்றமின்றி, ஒரு கிராம் 255 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 2,55,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் டாலரின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விலை மாற்றம் ஏற்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
Edited by Siva
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.