Con City Cast Reveal : மிரட்டலான டீம்.. அர்ஜுன் தாஸ் முதல் யோகி பாபு வரை.. ‘கான் சிட்டி’ கேரக்டர் போஸ்டர்ஸ் அவுட்!

தமிழ் சினிமாவுல இப்போ வித்தியாசமான டைட்டில்கள்ல படங்கள் வர்றது ஒரு ட்ரெண்டாவே மாறிடுச்சு. அந்த வரிசையில நம்ம அர்ஜுன் தாஸ், அன்னா பென் லீட் ரோல்ல நடிச்சிருக்குறு ‘கான் சிட்டி’ (Con City) படம், இப்போ பயங்கர ஹைப்ல இருக்கு. இயக்குனர் ஹரிஷ் துரைராஜ் இந்த படத்தை இயக்கி இருக்காரு. சமீபத்துல இந்த படத்தோட டீசர் வெளியாகி ஒரு மேஜிக் மெஷின் பத்தின சுவாரஸ்யமான கதையை சொல்லியிருந்தது. இப்போ படத்தோட முக்கிய கேரக்டர்களை அறிமுகப்படுத்துற போஸ்டர்களை படக்குழு வரிசையா ரிலீஸ் பண்ணிட்டு வர்றாங்க.

இந்த படத்துல அர்ஜுன் தாஸ் ‘சரவணா’ அப்படின்ற கேரக்டர்ல நடிக்கிறாரு. அவருக்கு ஜோடியா வர்ற அன்னா பென் ‘மித்ரா’வா வர்றாங்க. இவங்களோட இந்த படத்துல யோகி பாபு ‘ஜாக்கி’ன்ற ரோல்லையும், பழம்பெரும் நடிகை வடிவுக்கரசி ‘ஜானகி’ அப்படின்ற பாட்டியாவும் நடிக்கிறாங்க. ஒவ்வொரு போஸ்டருமே அந்தந்த கேரக்டரோட முக்கியத்துவத்தை ரொம்ப ராவா, அதே சமயம் மாஸா காட்டுதுன்னு தான் சொல்லணும். ஒரு சாதாரண மிடில் கிளாஸ் குடும்பத்துல மின்னல் அடிச்சதுக்கு அப்புறம் ஒரு பில் மிஷின்ல இருந்து பணம் கொட்டுறது தான் இந்த படத்தோட கதைக்கரு.

Lead actors Arjun Das and Anna Ben in their respective character looks for the film Con City.
அர்ஜுன் தாஸ் மற்றும் அன்னா பென் நடிப்பில் உருவாகியுள்ள ‘கான் சிட்டி’ படத் தம்பதியரின் பிரத்யேகப் புகைப்படங்கள்.

நட்சத்திர பட்டாளமே இந்த ‘கான் சிட்டி’ உலகத்துல அணிவகுத்து நிக்கிறாங்க. தம்பி ராமையா அமைச்சர் ‘வரதராஜ்’ ஆகவும், ரமேஷ் திலக் டாக்டர் ‘சுப்பிரமணி’யாகவும் நடிச்சிருக்காங்க. இது மட்டும் இல்லாம ராதாரவி ‘அப்துல் ரசாக்’ ஆகவும், விடிவி கணேஷ், ஷாஜி சென் என ஒரு பெரிய டீமே இதுல இருக்கு. ஷான் ரோல்டன் இந்த படத்துக்கு மியூசிக் பண்ணி இருக்காரு. ஏற்கனவே டீசர்ல அவரோட பிஜிஎம் பட்டைய கிளப்புச்சு. பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிச்சிருக்காங்க.

A representative movie still of Yogi Babu and Vadivukkarasi from the sets of Con City.
‘கான் சிட்டி’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள யோகி பாபு மற்றும் வடிவுக்கரசியின் மிரட்டலான தோற்றம்.

படத்தோட சூட்டிங் எல்லாம் முடிஞ்சு இப்போ போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பா நடந்துட்டு இருக்கு. சீக்கிரமே தியேட்டர்ல இந்த படத்தை ரிலீஸ் பண்ண போறதா மேக்கர்ஸ் சொல்லி இருக்காங்க. அர்ஜுன் தாஸோட அந்த பேஸ் வாய்ஸும், யோகி பாபுவோட காமெடியும் சேர்ந்தா தியேட்டர்ல கண்டிப்பா விசில் பறக்கும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.