Vignesh Shivan Big Dream : அனிருத் மாதிரி ஆகணும் – விக்கி போட்ட மாஸ் பிளான்!

இயக்குநர் விக்னேஷ் சிவன் தற்போது பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தின் ரிலீஸ் வேலைகளில் படு பிஸியாக இருக்கிறார். இந்த சூழலில் சமீபத்தில் அவர் கொடுத்த பேட்டி ஒன்றில் தனது கரியர் மற்றும் எதிர்கால ஆசைகள் குறித்து செம்ம ஓப்பனாக பேசியிருக்கிறார்.

சினிமால மியூசிக்னு எடுத்துக்கிட்டா இப்போ எல்லாருக்கும் அனிருத் தான் ஃபர்ஸ்ட் ஆப்ஷனா இருக்காரு. அதே மாதிரி ஹீரோயின்னு பார்த்தா நயன்தாரா தான் எல்லாருக்கும் முதல் சாய்ஸ். அந்த ஒரு இடத்த புடிக்கணும்ங்கிறது தான் என்னோட இப்போதைய வெறித்தனமான ஆசை என விக்கி சொல்லியிருக்காரு.

Director Vignesh Shivan during an official interview for the movie Love Insurance Kompany in 2026.
கோலிவுட்டில் டாப் லீக் இயக்குநராக வேண்டும் என்பதே தனது தற்போதைய இலக்கு என விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

இப்போதைக்கு எஸ்.எஸ்.ராஜமௌலி, பிரசாந்த் நீல் மற்றும் சந்தீப் ரெட்டி வங்கா போன்ற இயக்குநர்கள் அவங்களோட உச்சக்கட்ட ஃபார்ம்ல இருக்காங்க. அவங்க வரிசையில நானும் ஒரு நாள் கண்டிப்பா நிப்பேன் அப்படிங்கிற நம்பிக்கை எனக்கு முழுசா இருக்குன்னு விக்னேஷ் சிவன் ரொம்பவே கான்பிடென்ட்டா பேசியிருக்காரு. இந்த இலக்கை அடைய தான் 100 சதவீத உழைப்பை கொடுத்து வருவதாக அவர் உருக்கமாக கூறியுள்ளார்.

யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு ஒரு பெரிய இடத்தை சினிமாவில் பிடிக்கணும் அப்படின்னு விக்கி எடுத்திருக்க இந்த முடிவு இப்போ சோஷியல் மீடியால செம்ம ட்ரெண்டிங் ஆகிட்டு வருது. லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம் அவருக்கு அந்த பெரிய பிரேக் கொடுக்குமான்னு பொறுத்திருந்து தான் பாக்கணும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.