15 வருசமா கூட இருக்கும் நண்பன்; அவனைத் தெரிஞ்சுக்க வேண்டாமா?#CreditCard A-Z | 5 நாள்கள் 1 கான்செப்ட்

ஒரு டாபிக் ஐந்து நாள்கள் என்பதுதான் இந்தத் தொடரின் கான்செப்ட். அதாவது நிதி சம்பந்தமான ஏதேனும் ஒரு குறிப்பிட்ட தலைப்பை எடுத்து அதன் A டு Z விஷயங்களைத் தெரிந்துகொள்வது ஆகும்.

அப்படி இந்த வாரம் திங்கட்கிழமையில் இருந்து வெள்ளிக்கிழமை வரை, நாம் பார்க்கப்போகும் டாபிக், கிரெடிட் கார்டு.

கடன் அன்பை முறிக்கும்..., கடனே வாங்கக்கூடாது என்று கொள்கைகள் இருந்த காலம் இப்போது மலை ஏறிவிட்டது. இப்போதெல்லாம் கடன்கள் நவீன வடிவத்தில் கிரெடிட் கார்டுகளாக நமது பர்ஸ்களில் பிரசென்ட் ஆகியிருக்கின்றன.

வங்கியாளர் மோகன்குமார் ராமகிருஷ்ணன்

15 ஆண்டுகளுக்கும் மேலாக கிரெடிட் கார்டுகள் நமக்கிடையே அதிக புழக்கத்தில் இருந்தாலும், இன்னமும் அவற்றை பற்றிய சந்தேகங்கள் நமக்கு தீர்ந்தப்பாடில்லை.

ஆக, கிரெடிட் கார்டு குறித்து நமக்குள்ள அத்தனை சந்தேகங்களுக்கும் பதிலளிக்கிறார் முன்னாள் வங்கியாளர் மற்றும் செபி ஸ்மார்ட் பயிற்சியாளர் மோகன்குமார் ராமகிருஷ்ணன்.

முதலில் கிரெடிட் கார்டுகள் என்றால் என்னவென்று பார்த்துவிடுவோம்.

கையிலும், பையிலும் பணம் இல்லாத போது, வங்கிக்கு பணம் எடுக்க செல்வோம். அங்கேயும் பணம் இல்லையென்றால், என்ன ஆகும் நிலைமை?

இந்த நேரங்களில், ஃபிரண்டாக ஓடி வந்து உதவும் நிதி கருவி தான் கிரெடிட் கார்டு.

இந்தக் கார்டின் முக்கிய கான்ப்செப்ட், Buy Now, Pay Later.

இந்தக் கான்செப்ட்டை டெபிட் கார்டுடன் விளக்கினால், இன்னும் எளிதாகப் புரியும்.

கையில் பணம் இருக்கும்போதோ, சம்பளம் வரும்போது வங்கிக் கணக்கில் போட்டு வைப்போம்.

தேவையின் போது, அந்தப் பணத்தை டெபிட் கார்டு மூலம் ஏ.டி.எம்மில் இருந்து எடுப்போம்.

credit card
credit card - கிரெடிட் கார்டு

ஏற்கெனவே வங்கிக் கணக்கில் போட்டு வைத்திருக்கும் பணத்தை எடுக்க உதவுவது டெபிட் கார்டு.

ஆனால், கிரெடிட் கார்டோ முற்றிலும் வேறு.

உங்களிடம் சுத்தமாக காசு இல்லை... வங்கிக் கணக்கிலும் பணம் இல்லை. ஆனால், இப்போது ஏதேனும் ஒரு பொருள் வாங்க வேண்டியதாக இருக்கிறது அல்லது சாப்பிட வந்திருக்கிறீர்கள்.

இந்த நேரத்தில் எங்கேயும் கடனுக்கோ, உதவிக்கோ போய் நிற்க முடியாது.

இந்தச் சூழல்களில், உதவுவது தான் கிரெடிட் கார்டு. இந்தக் கார்டை ஒரு ஸ்வைப் செய்தால் போதுமானது.

நீங்கள் செலுத்த வேண்டிய தொகை யாருக்குக் கொடுக்க வேண்டுமோ, அவரது கணக்கிற்குச் சென்றுவிடும்.

இப்போது நீங்கள் கிரெடிட் கார்டில் இருந்து செலுத்திய தொகை கடனாக உங்களுக்கு மாறி நிற்கும்.

கிரெடிட் கார்டு
கிரெடிட் கார்டு

அதை நீங்கள் அதிகபட்சமாக அடுத்த 50 நாள்களுக்குள் வட்டியில்லாமல் செலுத்திவிடலாம்.

இதுவரை சொன்னதெல்லாம் உங்களுக்கே தெரியும். இப்போது ஒருவர் எத்தனை கிரெடிட் கார்டுகள் வைத்திருக்கலாம் என்பதற்கு வரலாம்.

இவ்வளவு ஹெல்பாக இருக்கிறதே என்று இஷ்டத்திற்கு கிரெடிட் கார்டு வாங்கிவிடக் கூடாது.

விதிமுறைகளின் படி, ஒருவர் எத்தனை கிரெடிட் கார்டு வேண்டுமானாலும் வாங்கலாம்... வைத்திருக்கலாம்.

ஆனால், நிதி ஒழுக்கத்தின் படி, ஒருவர் 2 - 3 கிரெடிட் கார்டுகளுக்குள் வைத்திருப்பதே நல்லது.

அப்போதுதான் பேமென்டுகளைச் சரியாகக் கட்டி, சிக்கலில் சிக்கிக் கொள்ளாமல் இருக்கலாம்.

என்னதான் பேமென்டுகளைக் கரெக்டாக கட்டி வந்தாலும், அதுவும் ஒரு வகை கடனே. அதனால், அதிக கடனில் சிக்கிக்கொள்ளாமல் இருப்பது நல்லது தானே.

இன்று இன்ட்ரோவைப் பார்த்துவிட்டோம். நாளை கிரெடிட் கார்டுகளில் இருக்கும் இரண்டு செக்குகள் குறித்து தெரிந்துகொள்வோம்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.