உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை - இந்த மெசேஜ் வந்தால் உடனே அலர்ட் ஆகுங்க!

தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர திருத்தம் முடிந்து இறுதி வாக்காளர் பட்டியலும் வெளியாகிவிட்டது.

இன்னும் 20 நாள்களில் தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலே நடைபெற உள்ளது.

இந்த நேரத்தில், பலருக்கு தற்போது வெளியாகி உள்ள வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இடம்பெறவில்லை. அது குறித்து தெரிந்துகொள்ள இந்த லிங்கைக் கிளிக் செய்யவும்,

தற்போது வெளியாகி இருக்கும் வாக்காளர் பட்டியலில் உங்களது பெயரில் தவறு உள்ளது. அதைச் சரிசெய்ய இந்த லிங்கை கிளிக் செய்யவும்,

SIR

உங்கள் வாக்காளர் அட்டையில் ஆதார் எண்ணை இணைக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும் என்று ஏகப்பட்ட மெசேஜுகள் இப்போது சுற்றிக்கொண்டு உள்ளது.

இந்த லிங்கை கிளிக் செய்தால், உங்கள் மொபைல் போனில் உள்ள வங்கிக் கணக்கு தகவல்கள் முதல் பெர்சனல் தகவல்கள் வரை அனைத்தும் திருடப்படக் கூடிய வாய்ப்புகள் உண்டு.

அதனால், இந்த லிங்குகளைத் தொட வேண்டாம் என்று தமிழ்நாடு காவல்துறை அறிவித்துள்ளது.

முக்கியமாக, தேர்தல் ஆணையம் தனிப்பட்ட முறையில் இப்படி ஒவ்வொருவரின் மொபைல் எண்ணுக்கு மெசேஜ் செய்யாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஒருவேளை, இந்த மோசடியில் சிக்கி இருந்தால் சைபர் கிரைமில் புகாரளியுங்கள்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.