Mani Sharma: ஹார்மோனியத்தை தூசி தட்டி எடுத்தபோது.! - கம்பேக் பற்றி பிரபல இசையமைப்பாளர் மணி சர்மா
தமிழ், தெலுங்கு என பல ஹிட் பாடல்களைத் தந்த இசையமைப்பாளர் மணி ஷர்மா. இன்றும், இவருடைய பாடல்கள்தான் பலருடைய ப்ளேலிஸ்டில் முக்கிய வைப் நம்பர்கள்.
டோலிவுட்டில் வெளிவந்த பேபி திரைப்படத்தின் இயக்குநரான சாய் ராஜேஷ் இயக்கியிருக்கும் சென்னை லவ் ஸ்டோரி படத்திற்கு மணி ஷர்மா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வில் அவருடைய கம்பேக் தருணம் பற்றி பேசியிருக்கிறார்.
அவர், "ஒருநாள் வீட்டில் சும்மா உட்கார்ந்திருந்தேன். அப்போது சாய் ராஜேஷ் வந்து, ‘நான் ‘பேபி’ படத்தை இயக்கிய இயக்குநர்’ என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.
எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் என்னிடம் என்ன வேலைக்காக வந்திருக்கிறார் என்றே தெரியவில்லை.
பிறகு நான் அவரிடம் ‘என் ஹார்மோனியம் எங்கே இருக்கிறது என்றே எனக்குத் தெரியாது’ என்று சிரித்தபடி சொன்னேன்.

ஆனால் அவர் விடாமல் தேடி, அதன் மீதிருந்த தூசியைத் துடைத்து, என் முன் கொண்டு வந்தார்.
ஒரு பாடலை இசையமைத்த பிறகு, இசை இன்னும் எனக்குள் இருக்கிறது என்பதை உணர்ந்தேன். அதன் பிறகு குழுவினருடன் இணைந்து மகிழ்ச்சியாக பல அழகான பாடல்களை உருவாக்கினேன்." என்றார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

.jpg?resize=390%2C205)
