ட்ரம்ப் அறிவிப்பால் பங்குச்சந்தை வரலாறு காணாத உயர்வு.. 1 மணி நேரத்தில் 13 லட்சம் கோடி ரூபாய் லாபம்...!
ஈரான் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எடுத்துள்ள அதிரடி முடிவால், இந்திய பங்குச்சந்தை இன்று வரலாறு காணாத எழுச்சியை கண்டுள்ளது. இன்று புதிய நிதியாண்டின் முதல் வர்த்தக நாளில், சென்செக்ஸ் ஆரம்பத்திலேயே 1,700 புள்ளிகள் உயர்ந்து முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஈரானிலிருந்து அமெரிக்க படைகள் இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் வெளியேறும் என்று ட்ரம்ப் அறிவித்ததை தொடர்ந்து, உலகளாவிய சந்தைகளில் நிலவிய போர் பதற்றம் தணிந்துள்ளது.
இதன் எதிரொலியாக நிஃப்டி 500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது. வர்த்தகம் தொடங்கிய ஒரு மணி நேரத்திற்குள்ளேயே முதலீட்டாளர்களுக்கு சுமார் 13 லட்சம் கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளது.
குறிப்பாக அரவிந்தோ பார்மா பங்குகள் 4% உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளன. கச்சா எண்ணெய் விலை தாக்கத்தால் விமான எரிபொருள் விலை 8.6% உயர்த்தப்பட்டாலும், சந்தையின் ஒட்டுமொத்த போக்கு சாதகமாகவே உள்ளது. சந்தையின் ஏற்ற இறக்கத்தைக் குறிக்கும் India VIX குறியீடு சரிந்துள்ளதால், முதலீட்டாளர்கள் தைரியமாக பங்குகளை வாங்கி வருகின்றனர்.
Edited by Siva
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.