நாளை வெளியாகும் Redmi Note 15 5G Special Edition - பேட்டரி கவலைக்கு முற்றுப்புள்ளி வைக்குமா?

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் எப்போதுமே ஒரு தனி இடத்தைப் பிடிக்கும் ஷாவ்மியின் ரெட்மி நோட் சீரிஸ், மீண்டும் ஒரு புதிய அத்தியாயத்துடன் களமிறங்கியிருக்கிறது.

ஆம், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரெட்மி நோட் 15 சீரிஸ் போன்கள் அறிமுகமாகியுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் நடுத்தர பட்ஜெட் பிரிவில் புதிய அளவுகோல்களை நிர்ணயிக்கும் ரெட்மி, இந்த முறை என்னென்ன ஆச்சரியங்களை வைத்திருக்கிறது?

வாருங்கள் விரிவாகப் பார்க்கலாம்.

ரெட்மி நோட் 15 சீரிஸ்

இந்த புதிய சீரிஸில் பல மாடல்கள் வரிசைகட்டி நிற்கின்றன. அதில் நம் கவனத்தை முதலில் ஈர்ப்பது ரெட்மி நோட் 15 ப்ரோ 5ஜி (Redmi Note 15 Pro 5G). "இதுதான் இந்த சீரிஸின் டாப் மாடலா?" என்று கேட்டால், இல்லை என்பதுதான் பதில். இது ஒரு ஸ்பெஷல் பவஃபுல் மாடல்தான், ஆனால் இதைவிட மேம்பட்ட அம்சங்களுடன் மற்றொரு போன் வரவிருக்கிறது என்பதற்கான ஒரு முன்னோட்டம் இது.

செயல்திறனைப் பொறுத்தவரை, ஆரம்பகட்ட தகவல்களின்படி, பெர்சனல் ஹாட்ஸ்பாட் போன்ற அம்சங்களில் இதன் செயல்பாடு மிகச் சிறப்பாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அன்றாடப் பயன்பாட்டிற்கு எந்தக் குறையும் வைக்காத ஒரு மாடலாக இது இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

ஆனால், இந்த சீரிஸின் உண்மையான ஸ்பெஷல் வேறு ஒன்று! அதுதான் ரெட்மி நோட் 15 5ஜி ஸ்பெஷல் எடிஷன் (Redmi Note 15 5G Special Edition). இந்த போன் வரும் ஏப்ரல் 2, 2026 அன்று அறிமுகம் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரெட்மி நோட் 15 சீரிஸ்
ரெட்மி நோட் 15 சீரிஸ்

"பேட்டரி தீர்ந்துவிடுமோ என்ற கவலைக்கு குட்பை சொல்லுங்கள்" (Say Goodbye To Low Battery Anxiety) என்ற டேக்லைனுடன் வரும் இந்த போன், பிரீமியம் டிசைன் மற்றும் நீண்ட நேர பேட்டரி ஆயுளுடன் ஒரு வேற மாதிரி அனுபவத்தைக் கொடுக்கும் என ஷாவ்மி உறுதியளிக்கிறது. பழைய ரெட்மி நோட் 11 ப்ரோ ப்ளஸ் 5ஜி போன்ற மாடல்களுடன் ஒப்பிடும்போது இது ஒரு மிகப்பெரிய அப்கிரேடாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

எல்லாமே சூப்பர்தான், ஆனால் ஷாவ்மி போன்களில் இருக்கும் அந்தப் பழைய பிரச்சினை இன்னும் இருக்கிறதா? அதுதான், ஷாவ்மியின் சொந்த ஆப்களில் வரும் எரிச்சலூட்டும் விளம்பரங்கள் இந்த முறையும் தொடர வாய்ப்புள்ளது. எனினும் வந்தால் தான் தெரியும்.

இவ்வளவு தரமான ஹார்டுவேரை வழங்கும் ஒரு நிறுவனம், மென்பொருள் அனுபவத்தில் இந்த விளம்பரங்கள் மூலம் கொஞ்சம் கோட்டைவிட்டுவிடுகிறது என்பது பலரின் ஆதங்கம். இந்த ஒரு விஷயத்தைத் தவிர்த்தால், ரெட்மி நோட் 15 சீரிஸ் நடுத்தர பட்ஜெட் பிரிவில் மீண்டும் ஒருமுறை கொடிகட்டிப் பறக்கும் என்பது உறுதி.

ரெட்மி நோட் 15 சீரிஸ்
ரெட்மி நோட் 15 சீரிஸ்

இப்போதைக்குக் கிடைத்துள்ள தகவல்கள் ஆரம்பகட்டமானவையே. ஏப்ரல் 2ம் தேதி ஸ்பெஷல் எடிஷன் மாடல் அறிமுகமாகும் போதுதான் முழுமையான மற்றும் அதிகாரப்பூர்வமான விவரங்கள் நமக்குக் கிடைக்கும். அதுவரை, இந்த புதிய சீரிஸ் என்னென்ன தாக்கங்களை ஏற்படுத்தப் போகிறது என்று காத்திருந்து பார்ப்போம்!

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.