Personal Finance: ஹலோ! உங்கள் குழந்தைக்கு என்ன சேர்த்து வைக்கப்போறீங்க?

ஹாய், எப்படி இருக்கீங்க?

வீட்டில் ஒரு குழந்தை பிறந்ததும் வாழ்க்கை ரொம்ப அழகாக மாறும். அதே நேரத்தில் பொறுப்புகளும் பல மடங்கு கூடும். டயப்பர், டாக்டர், தடுப்பூசி எனத் தொடங்கி, பள்ளிக் கட்டணம் வரை செலவுகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

குழந்தை சிரிக்கும்போது இந்தக் கஷ்டமெல்லாம் மறந்துபோகும். ஆனால், இரவு தூங்கப் போகும் முன் அம்மா, அப்பா மனசுக்குள்ள ஒரு கேள்வி மட்டும் வந்து போகும்: “இவனோட எதிர்காலத்தை நம்மால பாதுகாப்பா அமைச்சுத் தர முடியுமா?”

அதுதான் ஒவ்வொரு நடுத்தர வர்க்கப் பெற்றோரின் நிஜமான கவலை. நம் குழந்தையின் எதிர்காலம் குறித்து நமக்கு இருக்கும் முக்கியக் கனவுகள்:

  • எந்தச் சமரசமும் இல்லாத தரமான உயர்கல்வி.

  • நாளைக்கு அவன் விரும்பிய துறையைத் தேர்ந்தெடுக்க முழுச் சுதந்திரம்.

  • சொந்தமாக ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்றால் அதற்கான ஆரம்ப மூலதனம்.

Children (Representational Image)

ஆனால் இங்கேதான் ஒரு பெரிய சிக்கல் இருக்கிறது. இந்தியாவில் கல்விச் செலவுகள் வருடத்திற்குச் சராசரியாக 10% முதல் 12% வரை உயர்வதாகப் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.

இன்று ₹10 லட்சத்தில் முடியும் ஒரு கல்லூரிப் படிப்பு, இன்னும் 15–18 வருடங்களுக்குப் பிறகு ₹40 லட்சத்தைத் தாண்டிவிடும். அதாவது, நீங்கள் முதலீட்டைத் தொடங்கத் தாமதிக்கும் ஒவ்வோர் ஆண்டும், உங்கள் இலக்கு உங்களை விட்டு இன்னும் தூரம் போகிறது.

ஆனா, ஒரு நல்ல செய்தி இருக்கு; இதற்குத் தீர்வு இருக்கிறது

அது பெரிய அளவிலான மொத்த முதலீடு அல்ல; முன்கூட்டியே தொடங்கும் புத்திசாலித்தனமான SIP முறை. குழந்தை பிறந்த உடனே அல்லது சிறு வயதிலேயே SIP ஆரம்பித்தால், கூட்டுவட்டியின் (Power of Compounding) விந்தை உங்களுக்காக வேலை செய்யத் தொடங்கும்.

ஒரு சின்ன எடுத்துக்காட்டு: மாதம் வெறும் ₹5,000 முதல் ₹5,500 வரை SIP முறையில் 25 ஆண்டுகள் தொடர்ந்து முதலீடு செய்தால், வருடத்திற்கு 12% எதிர்பார்ப்பு வளர்ச்சியின் அடிப்படையில், உங்கள் குழந்தைக்காக ₹1 கோடி தொகுப்பு நிதி (Corpus) உருவாகும் வாய்ப்பு இருக்கிறது.

Representational Image

இந்தச் சிறிய முதலீடு நாளைக்குக் கொண்டுவரும் பெரிய மாற்றங்கள் என்ன தெரியுமா?

  • உங்கள் குழந்தை கல்விக் கடனுக்கு அடிமையாகாமல் சுதந்திரமாகப் பறக்கலாம்.

  • அவர்களது வாழ்க்கைப் பயணத்தை பணம் இல்லையே என்ற குறை தீர்மானிக்காது.

  • அவர்களுக்கு அசாத்தியமான நம்பிக்கையும், வலுவான நிதிப் பின்னணியும் கிடைக்கும்.

  • முக்கியமாக, பெற்றோராக நீங்கள் எந்தக் கவலையும் இல்லாமல் நிம்மதியாக இருப்பீர்கள்.

உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மேலும் சிறப்பாக மாற்ற வேண்டுமா?

Labham Workshop for Childrens Future
Labham Workshop for Childrens Future

குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவது பற்றி விரிவாகவும், நடைமுறைக்கு ஏற்ற வகையிலும் புரியவைக்க வருகிறது Team Labham நடத்தும் ஆன்லைன் மாஸ்டர்கிளாஸ்:

SIP for Newborns – Make Your Child a Crorepati by Age 25!
புதன்கிழமை, 1 ஏப்ரல் 2026 | மாலை 7:00 மணிக்கு

உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை அதிர்ஷ்டத்திடம் விட்டுவிடாதீர்கள்.

இப்போதே பதிவு செய்யுங்கள். முன்கூட்டியே தொடங்குவதுதான் நீங்கள் அவர்களுக்குத் தரும் மிகப்பெரிய பரிசு!

முன்பதிவு செய்ய: https://labham.money/events/webinar-apr01-2026?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_apr01_2026

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.