LIK: ஏப்ரல் சரி... எந்த ஏப்ரல்? - மீண்டும் தள்ளிப்போன ரிலீஸ்; உறுதியான ரிலீஸ் தேதி எப்போது?

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் எல்.ஐ.கே திரைப்படம் கடந்தாண்டு டிசம்பர் மாதம் வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

அதன் பிறகு படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் பிப்ரவரி மாதத்தில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்போதும் படம் ரிலீஸ் தொடர்பான எந்த அறிவிப்பும் வரவில்லை.

LIK - BTS - Vignesh Shivn

அதனைத் தொடர்ந்து குட் ஃப்ரைடே அன்று படம் வெளியாகும் எனச் சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிவித்திருந்தார், இயக்குநர் விக்னேஷ் சிவன்.

ஆனால், படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் முடிவடையாததால், ரிலீஸ் தள்ளிப் போகிறது எனப் பேசப்பட்டது. மீண்டும் மீண்டும் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது எனப் சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது.

தற்போது படத்தின் உறுதியான ரிலீஸ் தேதியை படக்குழுவினர் வெளியிட்டிருக்கின்றனர். Trust Me Bro என்பதைக் குறிப்பிட்டு ஒரு புரோமோ காணொளி மூலமாக ரிலீஸ் தேதியை அறிவித்திருக்கிறார்கள்.

அனிருத், பிரதீப் ரங்கநாதன், விக்னேஷ் சிவன் என மூவரும் சேர்ந்து நகைச்சுவையாக படத்தின் ரிலீஸ் தேதியை இந்தக் காணொளியில் அறிவித்திருக்கிறார்கள்.

View this post on Instagram

A post shared by Pradeep Ranganathan (@pradeep_ranganathan)

குட் ஃப்ரைடே ரிலீஸ் என விக்னேஷ் சிவன் தெரிவித்திருந்த நிலையில், மீண்டும் ஏப்ரல் 10-ம் தேதிக்கு படத்தின் ரிலீஸை மாற்றியிருக்கிறார்கள்.

கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா, சீமான், கெளரி கிஷன் எனப் பலரும் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

நானும் ரெளடி தான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கும் இப்படத்திற்கும் அனிருத் இசையமைத்திருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.