தங்கம், வெள்ளி விலை இன்று திடீர் உயர்வு.. இனி இறங்க வாய்ப்பே இல்லையா?
சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலையில் அதிரடி ஏற்றம் ஏற்பட்டுள்ளது.
இன்றைய நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 13,660 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் 1,09,280 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு சவரன் 1,07,440 ரூபாய்க்கு விற்ற நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு 1,840 ரூபாய் உயர்ந்துள்ளது. அதேபோல், 24 கேரட் சுத்தத் தங்கம் ஒரு கிராம் 14,902 ரூபாயாக அதிகரித்துள்ளது.
தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று கணிசமாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 250 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 2,50,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம், வெள்ளி விலை, தற்போது மீண்டும் உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் மற்றும் முதலீட்டாளர்கள் கவலையடைந்துள்ளனர். உலகளாவிய பொருளாதார சூழல் மற்றும் பங்குச் சந்தை மாற்றங்களே இந்த தொடர் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
Edited by Siva
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.