டிரம்ப் அறிவித்த போர் நிறுத்தம் எதிரொலி: இந்திய பங்குச்சந்தை இன்று ஏற்றம்..!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் பதற்றம் தற்காலிகமாக தணிந்ததை தொடர்ந்து, இந்திய பங்குச்சந்தைகள் இன்று பெரும் எழுச்சியுடன் தொடங்கின. 

 

ஈரானின் மின் கட்டமைப்பு மீதான தாக்குதலை அமெரிக்கா ஐந்து நாட்களுக்கு ஒத்திவைப்பதாக அறிவித்ததால், முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கை பிறந்துள்ளது. இதன் எதிரொலியாக, இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 73,741 என்ற அளவைத் தொட்டது. நிஃப்டி 297 புள்ளிகள் உயர்ந்து 22,819 புள்ளிகளில் வர்த்தகமானது.

 

ஆட்டோமொபைல், பொதுத்துறை வங்கிகள் மற்றும் உலோகத்துறை பங்குகள் சந்தையில் முன்னணியில் உள்ளன. உலகளாவிய சந்தைகளான ஜப்பான் மற்றும் தென் கொரிய சந்தைகளும் இன்று ஏற்றம் கண்டன. 

 

கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 டாலருக்கு கீழ் குறைந்ததும் சந்தையின் உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.   ஈரானுடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ட்ரம்ப் கூறினாலும், ஈரான் தரப்பு அதை மறுத்துள்ளதால் சந்தையில் ஒருவித கலவையான சூழலே நிலவுகிறது. இருப்பினும், தற்போதைய நிலவரப்படி அனைத்து துறை பங்குகளும் பச்சை நிறத்தில் லாபத்தில் இயங்குகின்றன.

 

Edited by Siva

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.