திமுக சீட் மோசடி!! ஆசிஃப் ராஜா, கார்த்திக் கைது!!

திமுக நிர்வாகி நாகலிங்கம் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட சீட் பெற திமுகவில் விருப்பமனு அளித்தார். ஆசிஃப் ராஜா என்பவர் திமுக தலைமைக் கழகத்தில் இருந்து தினேஷ் பேசுவதாக கூறி, சீட் பெற்றுத் தருவதாக 3 கோடி ரூபாய் பேரம் பேசினார்.


நாகலிங்கம் 1.5 கோடி ரூபாய் முன்பணமாக அபுதாஹிரிடம் கொடுத்தார். அபுதாஹிர் அந்த பணத்தை கார்த்திக்கிடம் கொடுத்தார். நாகலிங்கத்திற்கு நேர்காணலுக்கு அழைப்பு வராததால், அவர் புகார் அளித்தார்.


போலீஸ் விசாரணையில், ஆசிஃப் ராஜா, அபுதாஹிர், கார்த்திக் ஆகியோர் சேர்ந்து மோசடி செய்தது தெரியவந்தது. ஆசிஃப் ராஜா, கார்த்திக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அபுதாஹிர் தலைமறைவாக உள்ளார். ஆசிஃப் ராஜா வீட்டில் இருந்து 84 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.