மியூச்சுவல் ஃபண்டில் அதிக லாபம் பெற உதவும் செல்ப் லாக் இன் சிஸ்டம்... ஏப்ரல் முதல்! - விவரம் என்ன?

நீண்ட கால முதலீடு என்பது பலருக்கும் சோதனையான விஷயம்தான். 10, 15 ஆண்டுகள் முதலீடு செய்ய வேண்டும் என்றுதான் பலரும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீட்டை ஆரம்பிக்கிறார்கள். ஆனால், முதலீடு நன்றாக போய்க் கொண்டிரு இருக்கிற வரை யாருக்கும் அதை நிறுத்த வேண்டும் என்று நினைப்பதில்லை. ஆனால், சர்வதேச அளவில் ஏதோ ஒரு பாதகமான நிகழ்வு நடந்து, அதனால் பங்குச் சந்தைகள் இறங்கத் தொடங்கி, ஃபண்டுகளின் என்.ஏ.வி குறைய ஆரம்பித்தால், அதுவரை கிடைத்த லாபம் மிகவும் குறைந்துவிடும். அப்போது, முதலீட்டை நிறுத்தவேண்டும் என்றுதான் பலரும் நினைப்பார்கள்.

உதாரணமாக, தற்போது அமெரிக்கா - ஈரான் போர் நடந்துவருவதால், உலக அளவில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வினால், உலகளவில் பொருளாதார வளர்ச்சி குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், பங்குச் சந்தை புள்ளிகள் தொடர்ந்து இறக்கம் கண்டு வருகின்றன. இதனால் பங்குகளின் விலை குறைந்து, மியூச்சுவல் ஃபண்டுகளின் என்.ஏ.வியும் குறைந்து வருகிறது. இது மாதிரியான சமயத்தில்தான் பலரும் தங்கள் முதலீட்டை நிறுத்தலாமா என்று யோசித்து வருகிறார்கள்.

shoping

இன்னும் சிலருக்கு திடீர் செலவுகள் வரும்போது, கடன் வாங்குவதைவிட மியூச்சுவல் ஃபண்டில் இருக்கும் பணத்தை எடுத்துவிடலாம் என்று நினைப்பார்கள். இன்னும் சிலர், எந்தக் குறிப்பிட்ட காரணமும் இல்லாதபோதும் மியூச்சுவல் ஃபண்டில் இருக்கும் பணத்தை எடுக்கிறார்கள்.

இப்படி செய்வது தவறு என்று பல முதலீட்டாளர்களுக்குத் தெரிந்தும் அவர்கள் இடையிடையே மியூச்சுவல் ஃபண்டில் இருக்கும் முதலீட்டைத் திரும்ப எடுத்துவிடுவதைத் தடுக்க செபி இப்போது புதிய முறை ஒன்றைக் கொண்டுவருகிறது. அது, நம்முடைய முதலீட்டை நாமே லாக்-இன்செய்து வைத்துவிடுவது. இப்படி லாக்- இன் செய்த முதலீட்டை நாமே திரும்ப அன்-லாக் செய்தால் மட்டுமே நம்மால் முதலீட்டை விற்க முடியும்!ஒரு முதலீட்டாளர் மியூச்சுவல் ஃபண்டில் செய்துள்ள முதலீட்டை மெயில் மூலமாகவோ அல்லது செல்போன் மூலமாக தன்னுடைய முதலீட்டைத் தானே செல்ப் லாக்-இன் (Self lockin) செய்துவைக்க முடியும். எம்.எஃப் சென்ட்ரல் (Mfcentral) இணையதளம் மூலம் இந்த வசதியை ஒரு முதலீட்டாளர் பெற முடியும்.

ஒரு முதலீட்டாளர் தனது முதலீட்டைத் தானே செல்ப் லாக் இன் செய்வதன் மூலம் இரண்டு வகையான நன்மைகளைப் பெற முடியும். ஒன்று, குறிப்பிட்ட காலத்துக்கு முதலீட்டைத் திரும்ப எடுத்துக் கொள்ளப் போவதில்லை என்பதை முடிவு செய்தபிறகு, அந்த முடிவை மாற்றிக்கொள்ளாமல் இருக்க இந்த செல்ப் லாக் இன் மிகவும் உதவியாக இருக்கும். இதனால் இடையிடையே நம் முதலீட்டை நாமே பெற திரும்பப் பெற முடியாத நிலை உருவாகும். இதனால் பலரும் நீண்ட காலம் முதலீடு செய்து, அதிக லாபத்தை முதலீட்டாளர்கள் அடைவார்கள்.

lock in

தவிர, ஒரு முதலீட்டை வேறு யாரும் தொட முடியாத நிலை உருவாகும். மியூச்சுவல் ஃபண்டில் உங்கள் முதலீட்டை நீங்கள் மட்டுமே திரும்ப எடுக்க முடியும் என்றாலும், உங்கள் மெயில் ஐடி மற்றும் போன் நம்பர் பாஸ்வேர்டுகளைக் கண்டறிந்து, உங்கள் முதலீட்டை விற்க முயற்சி செய்யலாம். இது மிக மிக அரிதாக நடக்கும் நிகழ்வு என்றாலும், இது மாதிரி நடப்பதற்கும் செல்ப் லாக் இன் மிகவும் உதவியாக இருக்கும்.

இடைப்பட்ட காலத்தில் பணம் தேவை இல்லை; நிச்சயமாக நீண்ட காலத்துக்கு முதலீடு செய்யப் போகிறேன் என்கிற முடிவில் இருப்பவர்கள் இந்த செல்ப் லாக் இன் முறையைப் பயன்படுத்தி, தங்கள் முதலீட்டை லாக் இன் வசதியைப் பயன்படுத்தி, நீண்ட காலத்தில் நல்ல லாபம் அடையலாம். முதலீட்டில் இருந்து கிடைத்த லாபத்தின் ஒரு பகுதியைத் திரும்ப பெற நினைத்தால், முதலீட்டை அன் லாக் செய்து மீண்டும் தனது முதலீட்டைத் திரும்ப எடுத்துக்கொள்ளலாம்!

ஏப்ரல் மாதம் முதல் வரவிருக்கும் இந்த வசதியைத் தேவைப்படும் முதலீட்டாளர்கள் நிச்சயம் பயன்படுத்திக்கொள்ளலாமே!

Labham

இதுபோன்ற சுவாரஸ்யமான/முக்கிய முதலீடு தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய, லாபம் வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள் -  https://whatsapp.com/channel/0029VbAPqXkIt5rnQOIS4k3o

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய விருப்பமா? இன்றே AMFI பதிவு பெற்ற மியூச்சுவல் ஃபண்ட் விநியோக நிறுவனமான லாபம்-ஐத் தொர்புகொள்ளுங்கள் - மிஸ்டு கால்: 9600296001

நீங்கள் விரும்பிய நேரத்தில் லாபம் ரிலேஷன்ஷிப் மேனேஜரிடம் பேச, கால் புக் செய்யவும் -  https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-vikatan-com

குறிப்பு: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும் முன் திட்ட ஆவணங்களை படித்து பார்ப்பது அவசியம்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.