Dhurandhar The Revenge: ஒரு தவறான கருத்தைச் சரி என்று காட்ட.! - சாடும் திரைக்கதையாசிரியர்!

துரந்தர் முதல் பாகத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகமான துரந்தர் - தி ரிவெஞ்ச் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

ஆதித்ய தர் இயக்கியிருக்கும் இப்படத்தில் ரன்வீர் சிங், சாரா அர்ஜூன், மாதவன், சஞ்சய் தத், அக்ஷய் கண்ணா எனப் பலரும் நடித்திருக்கிறார்கள்.

Ranveer Singh| Dhurandhar The Revenge

இத்திரைப்படம் அதன் மேக்கிங் அம்சத்திற்காக பாராட்டைப் பெற்றாலும், இப்படம் பேசும் கருத்துக்களுக்காகவும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

திரைத்துறையைச் சேர்ந்த பலரும் இப்படம் பேசும் கருத்துக்களுக்காகப் படத்தை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

அந்த வரிசையில் மலையாள இயக்குநர் அமல் நீரத் இயக்கத்தில் வெளிவந்த பீஷ்மபர்வம் படத்தின் திரைக்கதையாசிரியர் தேவதத் ஷாஜி இப்படம் குறித்து விமர்சித்து அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

Bheesma Parvam Writer Devadath Shaji
Bheesma Parvam Writer Devadath Shaji

அவர், "ஒரு தவறான கருத்தைச் சரி என்று காட்ட, உயர்தரமான மேக்கிங்கை ஒரு திரைப்படம் பயன்படுத்தினால், அங்குத் தொழில்நுட்பத் திறன் என்பது மக்களின் சிந்தனையை மடைமாற்றும் ஒரு கருவியாக மாறிவிடுகிறது." எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.

இவரைப் போல, திரைத்துறையினர் பலரும், இது மதவாத அரசியலை பரப்பும் பிரச்சார சினிமா, பா.ஜ.க அரசு செய்த தவறுகளை புனிதப்படுத்தும் வேலையை இத்திரைப்படம் செய்திருக்கிறது." என விமர்சித்து வருகிறார்கள்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.