இன்று ஒரே நாளில் 10,000 ரூபாய் இறங்கிய வெள்ளி.. தங்கம் விலையும் கடும் சரிவு..!

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருவது நகைப்பிரியர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 
 

இந்த நிலையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ. 14,300-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது நேற்று நிலவிய ரூ. 14,570-ஐ விட ரூ. 270 குறைவாகும். 
 

அதேபோல், 24 கேரட் சுத்த தங்கம் ஒரு கிராம் ரூ. 15,600-க்கு விற்பனையாகிறது. கடந்த பத்து நாட்களில் மார்ச் 12-ம் தேதி தங்கம் உச்சபட்ச விலையாக ரூ. 16,331-ஐ எட்டிய நிலையில், தற்போது கணிசமாக குறைந்துள்ளது.

 

வெள்ளி விலையும் அதிரடியாக சரிந்துள்ளது. இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ. 265-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 2,65,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு கிலோ வெள்ளி ரூ. 2,75,000-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று 10,000 ரூபாய் குறைந்துள்ளது. 

 

சர்வதேச சந்தையில் நிலவும் மாற்றங்கள் மற்றும் பொருளாதார சூழல் காரணமாக இந்த விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர். நகை வாங்க திட்டமிடுபவர்களுக்கு இந்த விலை சரிவு ஒரு நல்ல வாய்ப்பாக கருதப்படுகிறது.

 

Edited by Siva

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.