ஹார்முஸில் 5,000 பவுண்ட் வெடிகுண்டு: யாரும் உதவிக்கு வரவில்லை; தானே களத்தில் இறங்கிய அமெரிக்கா

அமெரிக்காவும், இஸ்ரேலும் தங்களுக்கு எதிராக தொடுத்துள்ள போருக்கு ஈரானின் முக்கிய எதிர்வினை ஹார்முஸ் ஜலசந்தி மூடல்.

இந்த ஜலசந்தி மூடலால் உலகளவில் பல வர்த்தகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதை சரிசெய்ய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சீனா, ஜப்பான், நேட்டோ உள்ளிட்ட நாடுகளை ஹார்முஸ் ஜலசந்திக்கு போர்க் கப்பல்களை அனுப்ப சொல்லி கேட்டிருந்தார்.

ஆனால், எந்த நாடும் இதற்கு சம்மதிக்கவில்லை.

ஹார்முஸ் ஜலசந்தி

அமெரிக்காவின் சம்பவம்

இந்த நிலையில், அமெரிக்காவே ஹார்முஸ் ஜலசந்தி அருகே இருக்கும் ஈரானின் ஏவுகணைகள் மீது தாக்குதல் நடத்தி உள்ளது.

இதுகுறித்து அமெரிக்கா தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது...

"ஹார்முஸ் ஜலசந்தியின் கடற்கரை ஓரம் ஈரான் நிறுவியிருந்த ஏவுகணைகளை அமெரிக்க படை 5,000 பவுண்ட் எடை கொண்ட பல ஆழ்துளை வெடிகுண்டுகளை வீசி தகர்த்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளது.

ஏற்கெனவே ஈரானின் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் பலமான எதிர்வினை ஆற்றப்படும் என்று ஈரான் எச்சரித்திருந்தது. தற்போதைய அமெரிக்காவின் செயலுக்கு ஈரான் எப்படிப் பதிலடி கொடுக்கப்போகிறதோ?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.