விஐடி மொரீஷியஸ் சார்பில் தொழில்நுட்ப ஐடியாத்தான் போட்டி! - 5 நாடுகளை சேர்ந்த 1600 பேர் பங்கேற்பு

வேலூர் விஐடி மொரீஷியஸ் சார்பில் தொழில்நுட்ப ஐடியாத்தான் போட்டி இணையவழியில் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்வு பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்பட்டது. இதில், உலகம் முழுவதும் இருந்து 3,500-க்கும் மேற்பட்ட புதுமை யோசனைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

இரண்டு நாள் நிகழ்வில் மொரீஷியஸ், இந்தியா, மலேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய 5 நாடுகளைச் சேர்ந்த 297 கல்வி நிறுவனங்களில் இருந்து 1,612 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.

உலகளாவிய ஒத்துழைப்பு, புத்தாக்கத்தையும் ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற ஐடியாத்தான் போட்டியில் இறுதிச் சுற்றில் 200 அணிகள் தொழில்முறை வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்களைக் கொண்ட நடுவர் குழுவிடம் தங்கள் படைப்புகளை வழங்கினர்.

விஐடி மொரீஷியஸ் சார்பில் இணையவழியில் நடைபெற்ற தொழில்நுட்ப ஐடியாத்தான் நிகழ்வில் “நவீன மழை உணர் தானியங்கி நீர்ப்பாசன முறை” குறித்த புதுமை படைப்பை சமர்ப்பித்த மாணவிகள்.

மேலும், 2026 ஆம் ஆண்டுக்கான இளநிலை பொறியியல் (B.Eng. Hons) பட்ட படிப்புகளுக்கான கல்வி உதவித்தொகை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.