தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு.. மீண்டும் ஒரு லட்சத்திற்கு குறைவாக வருமா?
தமிழகத்தில் இன்று தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இன்றைய நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் நேற்றைய விலையான 14,760 ரூபாயிலிருந்து 50 ரூபாய் குறைந்து 14,710 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 1,17,680 ரூபாய்க்கு கிடைக்கிறது.
மேலும் 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 16,047 ரூபாயாகவும், எட்டு கிராம் 1,28,376 ரூபாயாகவும் குறைந்துள்ளது.
தங்கத்தை தொடர்ந்து வெள்ளியின் விலையும் இன்று வீழ்ச்சியை கண்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளி 280 ரூபாயிலிருந்து 4 ரூபாய் சரிந்து 276 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை 2,80,000 ரூபாயிலிருந்து 2,76,000 ரூபாயாக குறைந்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக விலையில் மாற்றமின்றி இருந்த நிலையில், இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலையில் ஏற்பட்டுள்ள இந்தச் சரிவு சந்தையில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
Edited by Siva
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.