ஷென்லாங் கப்பலின் வெற்றிகரமான பயணம்!

ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் போர் காரணமாக கப்பல்கள் நின்று கொண்டிருக்கின்றன. இந்தியாவில் எல்.பி.ஜி தட்டுப்பாடு எட்டிப்பார்க்கத் தொடங்கியுள்ளது. இந்த நேரத்தில், ஷென்லாங் என்ற கப்பல் மும்பை துறைமுகத்தை அடைந்துள்ளது.


ஷென்லாங் கப்பலை இந்திய மாலுமி சுக்ஷாந்த் சிங் சந்து ஓட்டி வந்தார். சவுதி அரேபியாவில் உள்ள ராஸ் தனுராவில் தொடங்கியது இந்தக் கப்பலின் பயணம். ஈரான் எச்சரித்திருந்தும், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வெற்றிகரமாக கப்பல் வந்துள்ளது.


கப்பலில் உள்ள Automatic Identification System (AIS) சிஸ்டத்தை ஆஃப் செய்து ஈரான் கண்ணில் படாமல் வந்துள்ளனர். 29 பேர் பயணித்த இந்தக் கப்பலில் 1,35,335 மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் உள்ளது.


இந்தக் கச்சா எண்ணெயை தரையிறக்க 36 மணிநேரம் ஆகும். அதன் பின், ஷென்லாங் ஐக்கிய அமீரக தூதரகத்திற்கு கிளம்ப உள்ளது. சுக்ஷாந்த் சிங் சந்துவின் திறமைக்கு பாராட்டு குவிகிறது. 

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.