Youth: நான் அசுரன் படத்துல சொன்னதை தவிர எல்லாத்தையும் பண்ணிருக்க.!- கென்னை கலாய்த்த தனுஷ்

அசுரன், விடுதலை 2, வாத்தி போன்ற படங்களில் நடித்த கென் இயக்கத்தில் யூத் படம் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் ப்ரி- ரிலீஸ் ஈவென்ட் இன்று ( மார்ச். 13) நடைபெற்றிருக்கிறது.

இதில் கலந்துகொண்டு பேசிய தனுஷ், " அசுரன் படத்தில நம்மக்கிட்ட காடு இருந்தா புடுங்கிடுவாங்க, காசு இருந்தா புடுங்கிடுவாங்க, படிப்பை மட்டும் எடுத்துக்கவே முடியாது சிதம்பரம்னு சொன்னேன்.

யூத் படம்

ஆனா, அதை தவிர நீ எல்லாமே பண்ணிருக்க... ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்லயே 3 பொண்ணுங்களோட பைக்ல உக்காந்திருக்க" என்று கென்னை தனுஷ் கலாய்திருக்கிறார்.

தொடர்ந்து பேசிய தனுஷ், " திடீரென கென் படம் பண்ணப்போறேன் என ஒரு நாள் வந்து சொன்னான். எதுக்குடா அவசரப்படுற, பொறுமையா இன்னும் சில படங்களில் அசிஸ்டன்ட்டா இருந்து கத்துக்கிட்டு பண்ணலாமேன்னு சொன்னேன். ஆனால், அதெல்லாம் பண்ணிடுவேன் என நம்பிக்கையா சொன்னான். அதே போல இப்போ படத்தை பண்ணி முடிச்சிட்டான்.

அப்போ எல்லாம் பெரிய நடிகர்களைப் பார்த்து பணிவை கத்துக்க சொல்வாங்க. ஆனால், இப்போ இருக்க புது ஜெனரேசன் கிட்ட வேகத்தை கத்துக்கணும்.

24 வயசுல தயாரிப்பாளரை பார்த்து கதை சொல்லி, இத்தனை பேர் டீமையும் புடிச்சு ஒரு படத்தை பண்றது சாதாரண விஷயமில்ல. நானெல்லாம் ரொம்ப யோசிச்சு யோசிச்சு நேரத்தை வேஸ்ட் பண்ணிட்டேன்னு தோணுது.

தனுஷ்
தனுஷ்

கென் கிட்ட இருந்து நான் அந்த வேகத்தை கத்துக்கிட்டேன். கென்னோட ப்ரெண்ட்ஸ் நிறைய பேரு திசை மாறி போயிருக்காங்க. ஆனா கென் அவன் குடும்பத்துக்காக நிக்குறான்.

கென் என்னோட பையன் மாதிரி இல்ல பையன் தான். இந்த யூத் படம் மாபெரும் வெற்றி அடைஞ்சு உனக்கும், உன்னை நம்பி வந்த உன் டீமூக்கும், பெற்றோருக்கும் ஆசிர்வாதம் அமைய வேண்டும்னு கடவுளை வேண்டிக்கிறேன்" எனப் பேசியிருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.