தமிழக பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவியேற்பு!!
முன்னாள் ஆளுநர் ஆர்.என்.ரவி, மேற்கு வங்கத்திற்கு மாற்றப்பட்டு, ராஜந்திர விஸ்வநாத் அர்லேகர் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக பதவியேற்றார்.
இவர் 1954-ல் கோவாவில் பிறந்து, செயின்ட் ஜோசப் கல்வி நிறுவனத்தில் ஆரம்பக் கல்வி பயின்று, எம்.இ.எஸ். கல்லூரியில் வணிகவியல் பட்டம் பெற்றவர்.
இவர் 2002-2007 காலத்தில் கோவா சட்டமன்ற உறுப்பினராகவும், 2012-2017-ல் கோவா சபாநாயகராகவும் பணியாற்றினார். கோவா சட்டமன்றத்தை டிஜிட்டல் சட்டமன்றமாக மாற்றினார்.
இமாச்சல், பீகார் மாநிலங்களின் ஆளுநராக பதவி வகித்த இவர், கடந்த ஆண்டு கேரள ஆளுநராக பதவியேற்றார். தற்போது தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக பதவியேற்றுள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


