சென்னையில் தங்கம் விலை மீண்டும் உயர்வு.. ஒரு சவரன் எவ்வளவு?
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்து நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த திங்கள்கிழமை ஒரு பவுன் ரூ.1,19,600 என குறைந்திருந்த நிலையில், அடுத்தடுத்த நாட்களில் விலை ஏறுமுகமாகவே உள்ளது. இன்றைய நிலவரப்படி, ஒரு கிராமுக்கு ரூ.70 அதிகரித்து ரூ.15,120-க்கும், ஒரு பவுனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1,20,960-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் இன்று பெரிய மாற்றங்கள் எதுவுமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.300-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.3 லட்சத்திற்கும் நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது.
சமீபகாலமாக டாலரின் மதிப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலை மாற்றங்களால் தங்கம் விலை சற்று குறைந்திருந்தது. ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களால் விலை மீண்டும் உயர தொடங்கியுள்ளது.
Edited by Siva
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

