திராவிட மாடல் ஆட்சி: விளையாட்டு வீரர்களை ஊக்குவித்திட அரசு வழங்கும் உதவிகளும், ஊக்கத்தொகைகளும்!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களும் மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களும் இளைஞர்களை ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபடுத்திடவும், சிதறிக் கிடக்கும் இளைஞர்களின் ஆற்றல்களைத் திரட்டிடவும், அவர்களை மன உறுதி படைத்தவர்களாகவும், எதிர்கால வாழ்வை நம்பிக்கையோடு எதிர்கொள்பவர்களாகவும் உருவாக்கும் பெரும் பொறுப்பை நிறைவேற்றும் பொருட்டு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் சிறப்பான பணிகளுக்கு ஊக்கமளித்து வருகிறார்கள்.
மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இளைஞர் நலனிலும், விளையாட்டுக் கலை வளர்ச்சியிலும் சிறப்புக் கவனம் செலுத்தி; பல்வேறு புதிய திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்கள். அவற்றின் பயனாக இந்திய அளவில் தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டுத் துறை பல சாதனைகளை நிகழ்த்தி; இந்தியாவின் விளையாட்டுத் தலைநகரம் சென்னை எனப் புகழ் வளர்த்து வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் விளையாட்டு மேம்பாட்டுத்துறை நிகழ்த்தியுள்ள முக்கிய சாதனைகள் மீது ஒரு கண்ணோட்டம்.
திராவிட மாடல் அரசு நடத்திய முக்கிய விளையாட்டுப் போட்டிகள்
44-வது செஸ் ஒலிம்பியாட் – 2022
சென்னை ஃபார்முலா- 4 கார் பந்தயம் 2024
சர்வதேச மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி-2022
ஸ்குவாஷ் உலகக் கோப்பை-2023
ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி -2023
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி 2023
சர்வதேச அலை சறுக்குப் போட்டி- 2023
சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் 2025
முதலமைச்சர் கோப்பை-2023-2024, 2024-2025, 2025-2026
ஆகிய போட்டிகள் எல்லாம் தொடர்ந்து நடத்தி உலக அளவில் விளையாட்டு ஆர்வலர்களிடையே தமிழ்நாடு ஒரு முக்கிய விளையாட்டு களமாக மதிக்கப்படுகிறது.
இந்திய தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பின் விருது
திராவிட மாடல் அரசு விளையாட்டுத்துறைக்கு அளித்துவரும் அளப்பரிய உதவிகளையும் ஊக்கங்களையும் பாராட்டி போற்றும் வண்ணம் இந்தியத் தொழில் நிறுவனங்கள் கூட்டமைப்பின் சார்பில் விளையாட்டுகளை ஊக்குவித்திடும் சிறந்த மாநிலம் என தமிழ்நாட்டை தேர்வு செய்து 2025 ஆம் ஆண்டிற்கான விருதினை வழங்கிப் பாராட்டியுள்ளது.
இந்து குழுமத்தின் 2024 ஆம் ஆண்டிற்கான விருது
விளையாட்டுத்துறைக்கு திராவிட மாடல் அரசு வழங்கிவரும் அபரிமிதமான ஊக்கத்தைப் பாராட்டி 2024 ஆம் ஆண்டிற்கான தி இந்து குழுமம் ஸ்போர்ட்ஸ் ஸ்டார் ஏசஸ் 2024 விருது வழங்கிப் பாராட்டியுள்ளது.

ஒலிம்பிக் அகாடெமிகள்
தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்களும் வீராங்கணைகளும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுப் பதக்கங்கள் பெறுவதை ஊக்குவிப்பதற்காக ஒலிம்பிக் தங்கம் தேடல் என்னும் திட்டத்தைத் திராவிட மாடல் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், ஒலிம்பிக் போட்டிகளுக்கு முறையான பயிற்சிகள் அளித்திடும் நோக்கில் சென்னை, திருச்சி, மதுரை நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஒலிம்பிக் அகாடெமிகளை திராவிட மாடல் அரசு நிறுவியுள்ளது.
சர்வதேசத் தரத்தில் விளையாட்டுக் களங்கள்
தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களும் வீராங்கனைகளும் சிறந்த முறையில் பயிற்சிகளைப் பெற வேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விளையாட்டு அரங்கங்களிலும் சர்வதேசத் தரத்தில் செயற்கை ஓடுபாதைகள், விளையாட்டு அரங்கங்கள், நீச்சல் குளங்கள், மாவட்ட விளையாட்டு வளாகங்கள், சிறு விளையாட்டு அரங்குகள், தங்கும் விடுதிகள், பயிற்சி மையங்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
40 சர்வதேச, தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள்
வேறு எந்த மாநிலத்திலும் நடைபெறாத வகையில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் திராவிட மாடல் அரசின் முனைப்பால் 40 சர்வதேச மற்றும் தேசிய அளவிலான சர்வதேசப் போட்டிகள் நம் தமிழ்நாட்டில்தான் நடைபெற்றுள்ளன என்பது தமிழ்நாட்டின் விளையாட்டுத்துறை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க சாதனையாகும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களும், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களும் தமிழ்நாட்டின் விளையாட்டுத் துறையை இந்திய அளவில் மட்டும் அல்லாமல் உலக அளவிலும் புகழ் கொடி நாட்டும் வகையில் சிறப்பாக வளர்த்தெடுத்து வருவதால் இந்தியாவின் விளையாட்டுத் தலைநகரம் தமிழ்நாடு என இன்று பெற்றுள்ள புகழ் நாளை, உலகின் விளையாட்டுத் தலைநகரம் தமிழ்நாடு என்னும் பெருமையையும் புகழையும் ஈட்டும் என்பது உறுதி உறுதி!
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


