ஈரான் போர் எதிரொலி: சிலிண்டர் தட்டுப்பாடு அபாயம்? எண்ணெய் நிறுவனங்களுக்கு தமிழக அரசு புது உத்தரவு
11-வது நாளாக ஈரான் போர் தொடர்ந்து வருகிறது.
இந்தப் போர் தொடர்ந்தால், இந்தியா மாதிரியான பெரியளவில் எரிசக்தி இறக்குமதி நாடுகளுக்குப் பெரும் பாதிப்பு.
இன்னும் இந்தியாவில் தட்டுப்பாடு ஏற்படவில்லை என்றாலும், மத்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதில் ஒன்றுதான், கடந்த 7-ம் தேதியிலிருந்து வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் இந்தியா முழுவதும் ரூ.60 உயர்த்தப்பட்டுள்ளது.
கமர்ஷியல் சிலிண்டர்களின் விலை ரூ.115 உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சமையல் எரிவாயுத் தட்டுப்பாடு குறித்து தமிழ்நாடு அரசு அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளது.
அதில் தமிழ்நாட்டில் உள்ள எண்ணெய் நிறுவனங்களிடம் தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டிற்குப் போதிய அளவு கேஸ் சிலிண்டர்கள் உள்ளதா? என்று கேள்வி எழுப்பியுள்ளது.
இரண்டாவது, கையிருப்பிலுள்ள சிலிண்டர்கள் விவரம் குறித்த தரவுகளை இன்று மதியத்திற்குள் தமிழ்நாடு அரசிடம் எண்ணெய் நிறுவனங்கள் சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


