IND vs NZ: இந்தியா எங்களை விட சிறப்பாக விளையாடியது, இருந்தாலும்.!- நியூசி கேப்டன் சாண்ட்னர்

அகமதாபத்தில் (மார்ச்.8) நடைபெற்ற டி20 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி வரலாற்று சாதனைப் படைத்திருக்கிறது.

இந்நிலையில் அணியின் தோல்விக்கு பிறகு

பேசிய நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர், " முதலில், இந்த அளவுக்கு வந்ததற்காக எங்கள் அணியின் வீரர்களைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

ind vs nz

இந்த தொடரில் பல சவால்கள் இருந்தன. ஆனாலும் ஒவ்வொரு கட்டத்தையும் கடந்து நாங்கள் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினோம்.

அருமையான ரசிகர்கள் முன்னிலையில் இந்த அணி சிறப்பாக விளையாடியது. இருந்தாலும் என் அணியைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன்.

முழுக்க நீல நிற ரசிகர்கள் நிறைந்த கூட்டத்தைப் பார்ப்பது ஒரு சிறப்பாக இருந்தது. தனது நாட்டில் விளையாடும் அணிக்கு எப்போதும் அதிக அழுத்தம் இருக்கும்.

அந்த அழுத்தத்தை சமாளித்து இந்திய அணி வீரர்கள் மிகவும் சிறப்பாக விளையாடினார்கள்.

ஒவ்வொரு கட்டத்திலும் வெவ்வேறு வீரர்கள் முக்கிய பங்கு வகித்தார்கள். ஒவ்வொரு சுற்றிலும் பல சவால்களை சந்தித்தோம்.

சாண்ட்னர்
சாண்ட்னர்

அவற்றை சமாளித்து முன்னேறுவது எளிதல்ல. குறிப்பாக செமி பைனலில் நாங்கள் நல்ல ஆட்டம் காட்டினோம். ஆனால் இன்று எதிரணி எங்களை விட சிறப்பாக விளையாடியது. இருந்தாலும் எங்கள் அணியின் முயற்சியைப் பற்றி நாங்கள் பெருமைப்பட வேண்டும்" என்று பேசியிருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.