வறுத்த கோழி... இதயத்திற்கு ஆபத்தா?
கோழி இறைச்சியை எண்ணெய்யில் பொரித்து தயார் செய்யப்படும் பிரைடு சிக்கனை பலரும் ருசிப்பதுண்டு. அதனை அடிக்கடி சாப்பிடுபவர்களும் உண்டு. அடிக்கடியோ, தினமுமோ பிரைடு சிக்கன் சாப்பிட்டால் உடலில் என்ன நடக்கும் தெரியுமா?
* இந்த வறுத்த கோழி இறைச்சியில் நிறைவுற்ற கொழுப்பு அதிகம் இருக்கும். தினமுமோ, அடிக்கடியோ சாப்பிடும்போது உடலில் கெட்ட கொழுப்பை அதிகரிக்க செய்துவிடும்.
* கலோரிகளும் அதிகம் இருக்கும். தொடர்ந்து சாப்பிடும்போது கலோரிகள் வேகமாக சேர்ந்து உடல் எடை அதிகரிக்க வழிவகுக்கும்.
* பிரைடு சிக்கனை தொடர்ச்சியாக சாப்பிடும் நிலை நீடித்தால் காலப் போக்கில் உடல் பருமன், அதிக கொழுப்பு, இதய நோய் அபாயம் அதிகரிக்கலாம்.
* சர்க்கரை பானங்கள், நொறுக்குத்தீனிகளுடன் சேர்த்து வறுத்த கோழி இறைச்சி சாப்பிடவும் கூடாது.
எப்படி சாப்பிடலாம்?
கோழி இறைச்சியை வேகவைத்தோ, நெருப்பில் சுட்டு கிரில் சிக்கனாகவோ உட்கொள்ளலாம்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.