5 நாட்களுக்கு பின் திடீரென உயர்ந்த தங்கம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?
சென்னையில் கடந்த சில நாட்களாகக் குறைந்து வந்த தங்கத்தின் விலை இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது.
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 720 அதிகரித்து, ஒரு சவரன் ரூ. 1,20,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 90 உயர்ந்து ரூ. 15,050க்கு விற்பனையாகிறது. இந்த வாரத்தின் கடந்த 5 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 6,520 வரை குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, கடந்த மார்ச் 1-ஆம் தேதி தங்கம் விலை அதன் உச்சபட்ச அளவாக ஒரு சவரன் ரூ. 1,26,200-க்கு விற்பனையானது. தங்கம் விலை உயர்ந்தாலும், வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை.
ஒரு கிராம் வெள்ளி ரூ. 290-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 2.90 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மார்ச் 1-ஆம் தேதி வெள்ளி ஒரு கிராம் ரூ. 325க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
உலகளாவிய பொருளாதார சூழல் மற்றும் அரசியல் மாற்றங்களால் தங்கம் விலையில் இந்த ஏற்ற இறக்கங்கள் நீடித்து வருகின்றன.
Edited by Siva
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

