போர் வந்தால் தங்கம் விலை உயருமே? ஆனால் குறைந்தது ஏன்? ஆச்சரியத்தில் வல்லுனர்கள்..!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி விலையில் இன்று அதிரடி சரிவு ஏற்பட்டுள்ளது. 

 

இன்றைய நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 80 ரூபாய் குறைந்து 15,120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மார்ச் 3-ஆம் தேதி ஒரு கிராம் தங்கம் 15,465 ரூபாயாக இருந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களில் மட்டும் கணிசமான அளவு விலை குறைந்துள்ளது முதலீட்டாளர்கள் மற்றும் நகைப்பிரியர்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

 

அதேபோல், தூய தங்கத்தின்  விலை இன்று கிராமுக்கு 16,494 ரூபாயாக குறைந்துள்ளது. வெள்ளியின் விலையை பொறுத்தவரை, இன்று பெரிய மாற்றமின்றி ஒரு கிராம் 295 ரூபாய்க்கு தொடர்கிறது. இருப்பினும், கடந்த மார்ச் 3-ஆம் தேதி நிலவிய 315 ரூபாயுடன் ஒப்பிடுகையில் இது பெரிய வீழ்ச்சியாகும். 
 

சர்வதேசச் சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள், டாலர் மதிப்பு உயர்வு மற்றும் கச்சா எண்ணெய் விநியோக சீரமைப்பு போன்ற காரணங்களால் இந்தியச் சந்தையில் விலையேற்றம் கட்டுக்குள் வந்துள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர். இந்த விலை வீழ்ச்சி வரும் திருமணக் காலங்களில் நகை வாங்குவோருக்குச் சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது.

 

Edited by Siva

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.