திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்!! நீதிமன்ற அவமதிப்பு மனு முடிக்க உத்தரவு!!
திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் பூஜை செய்ய 5 பேருக்கு அனுமதி வழங்கினால், நீதிமன்ற அவமதிப்பு மனு முடிக்கப்படும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் தாக்கல் செய்த பதில் மனுவில், சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்த மாநகர் காவல் ஆணையர் அளித்த கடிதத்தின் அடிப்படையில் 144 தடையாணை பிறப்பிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் ஏற்கெனவே ஏற்றிய இடத்தில் தீபம் ஏற்ற கூறவில்லை எனவும், இந்துக்களுக்குச் சொந்தமான பகுதியில் தீபம் ஏற்ற வேண்டும் என்றுதான் உத்தரவிடப்பட்டது எனவும் கூறினார்.
அமைச்சர் ரகுபதியை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை நீதிபதி நிராகரித்தார். தீப விவகாரத்தில் அமைச்சர் ரகுபதி விஷமத்தனம் செய்துள்ளார் எனவும் கூறினார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


