Khamenei: துக்கமும், கொண்டாட்டமுமாக ஈரான் எதிர்கொண்ட எல்லாமுமான காமேனியின் மரணம்!
அயதுல்லா அலி கமேனி - ஈரானில் கிட்டத்தட்ட 36 ஆண்டுகள் உச்சத் தலைவராக இருந்தவர். தற்போது ஈரானில் நடந்து வரும் போரில் உயிரிழந்துள்ளார்.
இந்தச் செய்தியைக் கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 28) அமெரிக்க அதிபர் ட்ரம்பும், அடுத்த நாளான நேற்று (மார்ச் 1) ஈரானின் அதிகாரபூர்வமான செய்தி நிறுவனமான IRIB (Islamic Republic of Iran Broadcasting)-உம் உறுதி செய்தனர்.
இவரின் இறப்பை ஈரான் இரண்டு வகைகளில் எதிர்கொண்டது. ஒன்று, சோகம்... அழுகை... கோபம்.
மற்றொன்று, சிரிப்பு... மகிழ்ச்சி... கொண்டாட்டம்.
முதல் வகைக்கான காரணத்தைப் பார்க்கலாம்...
கமேனி என்பவர் ஈரானைப் பொறுத்தவரை, எல்லாமுமானவர். அப்படிப்பட்டவரின் இறப்பு அந்த நாட்டை எப்படி உலுக்கி இருக்கும் என்பது நமக்கே எளிதாகப் புரியும்.
தங்களுடைய தலைவர் இரு நாடுகளுக்கு இடையிலான தாக்குதலில் உயிரிழந்துள்ளார் என்பதை ஈரானில் இருக்கும் சில... பல... மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இதன் விளைவுதான், இஸ்ரேல் மீதும், அமெரிக்கப் படைகள் அமைந்துள்ள மத்தியக் கிழக்கு நாடுகள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதலுக்கான காரணம்.
இப்படிப்பட்ட தலைவரின் இறப்பை ஈரானின் ஒரு தரப்பு மக்கள் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். அதற்கு காரணம்...
பிற மத்தியக் கிழக்கு நாடுகள் மாற்றம்... முன்னேற்றம் என்று வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வருகின்றன. ஆனால், ஈரான் இன்னும் பழமையைத் தக்க வைப்பதிலேயே இருக்கிறது.
இது அந்த நாட்டு மக்களுக்கு ஒருவித அயர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.

அதனால், கமேனியின் மரணம் 36 ஆண்டுக்கால அதிகாரத்தையும் முடிவுக்குக் கொண்டுவரும்; மாற்றம்... முன்னேற்றம் வரும் என்று நினைக்கிறார்கள்.
கமேனியின் மரணம் ஈரானில் ஆட்சி மாற்றம் முதல் பொருளாதார மாற்றம் வரை பல மாற்றங்கள் கொண்டு வரும் என்று நினைக்கிறார்கள்.
அதன் விளைவுதான், டெஹ்ரான், கராஜ், மஷாட் ஆகிய நகரங்களில் மக்கள் ஆட்டம், பாட்டத்துடன் கமேனியின் மரணத்தைக் கொண்டாடியது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


