மூச்சு விட முடியவில்லை; உங்களால் முடிந்த உதவியைச் செய்யுங்கள் - காதல் பட நடிகை

‘காதல்’, ‘வாத்தியார்’, ‘அரவான்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்த நடிகை காதல் மல்லேஸ்வரி உடல்நிலை சரியில்லாமல் பாதிக்கப்பட்டுள்ளார்.

‘காதல்’ திரைப்படத்தில் சந்தியாவின் தாயாராக இவர் நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு எனப் பல படங்களில் நடித்துவந்த இவருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டுள்ளது.

Kadhal Malleswari

கடந்த 20 நாட்களாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருக்கென யாரும் இல்லாததால், திரைத்துறையினரிடம் சிகிச்சைக்கு உதவி கோரி ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார் மல்லேஸ்வரி.

அந்தக் காணொளியில் ‘காதல்’ மல்லேஸ்வரி பேசியதாவது: “என்னை ‘காதல்’ மல்லேஸ்வரி எனச் சினிமாவில் அழைப்பார்கள்.

காதல் படத்தில் சந்தியா கதாபாத்திரத்தின் தாயாராக நான் நடித்திருந்தேன். இதுவரை நான் தமிழ், தெலுங்கு என 40 படங்களில் நடித்திருக்கிறேன்.

Kadhal Malleshwari
Kadhal Malleshwari

கவுண்டமணி, செந்தில் சாருடனும் காமெடி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். எனக்கு இப்போது நுரையீரலில் தொற்று ஏற்பட்டிருக்கிறது.

அதனால் மூச்சு விட முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. சாப்பாட்டிற்குக்கூட வழி இல்லாமல் இருக்கிறேன். அதனால் உங்களால் முடிந்த உதவியை எனக்காகச் செய்யுங்கள்” என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.