விஜய்-சங்கீதா விவாகரத்து!! அண்ணாமலை கருத்து!!

தவெக தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ள நிலையில் இதுகுறித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.


அண்ணாமலை கூறுகையில், விஜய்யின் அரசியல் கருத்துக்கு பதில் கூறுவதற்கு தான் எப்போதும் தயாராக உள்ளதாகவும், அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அரசியல் ரீதியாக கருத்து சொல்ல விரும்பவில்லை எனவும் கூறியுள்ளார்.


அதைதொடர்ந்து, அரசியலுக்கு வந்துவிட்டால் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல விஷயங்கள் வெளிவரும். பலருக்கு இது நடந்துள்ளது.

விஜய் அரசியலுக்கு வரும்பொழுதே இதை பற்றி எல்லாம் யோசனை செய்துதான் வந்திருப்பார். இதை அவர் கடந்து தான் போக வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார். 

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.