6 சீட் கேட்கும் தவாக; மௌனமாக அனுப்பி வைத்த அறிவாலயம்! - என்ன சொல்கிறார் வேல்முருகன்
அறிவாலயத்தில் திமுகவின் தொகுதி பங்கீடு குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார்.
அவர் பேசியதாவது, தவாகவுக்கு கூடுதல் தொகுதிகள் வேண்டுமென்றும் தமிழ்ச் சமூகத்துக்கான சில கோரிக்கைகளையும் கொடுத்திருக்கிறேன். ஒரு நாடாளுமன்றம் மற்றும் 6 சட்டமன்றத் தொகுதிகளையும் கேட்டிருக்கிறேன்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு.
ஈழப்படுகொலைக்கு எதிராக பன்னாட்டு விவாதமாக எடுக்க வேண்டும்.
தமிழக அரசின் பணிகள் 100% தமிழர்களுக்கே வழங்க வேண்டும்.
கோவில்களில் குடமுழுக்கு, அர்ச்சனை போன்றவை தமிழில் செய்ய வேண்டும்.
சுங்கச்சாவடிகளை இழுத்து மூட வேண்டும்.
இஸ்லாமிய கைதிகளை விடுவிக்க வேண்டும்.

தமிழகத்தில் நடக்கும் குற்றங்களுக்கு வட மாநிலத்தவர்கள் முக்கிய காரணமாக இருக்கிறார்கள். அவர்களின் வருகையை கட்டுப்படுத்த வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறேன் என்றார்.
எல்லாருக்கும் சீட்டை குறைக்குறாங்களாமே உங்களுக்கும் குறைப்பாங்களா சார்? என ஒரு நிருபர் கேட்க, எனக்கு இதுக்கு மேல குறைக்கவே முடியாது. போன முறை கொடுத்ததே ஒண்ணுதான் என வெடித்துச் சிரித்தார்.
6 சீட் கேட்ட வேல்முருகனுக்கு பேசிவிட்டு சொல்கிறோம் என சம்பிரதாய பதிலை கூறி அனுப்பியிருக்கிறது அறிவாலயம்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


