தங்கம் விலை இன்று குறைவு.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

 

 தமிழகத்தில் இன்று அதாவது பிப்ரவரி 27, 2026 அன்று தங்கம் விலையில் சிறிய சரிவு காணப்படுகிறது. 

 

ஆபரணத் தங்கம் (22 கேரட்) ஒரு கிராம் விலை 20 ரூபாய் குறைந்து 14,900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கம் 1,19,200 ரூபாயாக உள்ளது. 

 

அதேபோல், 24 கேரட் தூய தங்கம் ஒரு கிராம் 16,254 ரூபாயாகவும், ஒரு சவரன் 1,30,032 ரூபாயாகவும் குறைந்துள்ளது. நேற்று ஒரு சவரன் 1,30,208 ரூபாய்க்கு விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது. ஒரு கிராம் வெள்ளி 295.00 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2,95,000.00 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

 

கடந்த சில தினங்களாக தங்கம் விலை அதிரடியாக உயர்ந்த நிலையில், இன்று ஏற்பட்டுள்ள இந்த சிறிய சரிவு நகை வாங்குவோருக்கு சற்று நிம்மதியை தந்துள்ளதாக தெரிகிறது. இருப்பினும், ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்தை தாண்டி விற்பனையாவதால் மக்கள் கவனத்துடன் திட்டமிடுகின்றனர்.

 

Edited by Siva

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.