மின் மாற்றிகள் கொள்முதல் முறைகேடு!! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!!
ரூ.397 கோடி தமிழகத்தில் மின் மாற்றிகள் கொள்முதல் செய்ததில் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் நடைபெறும் ஆரம்பகட்ட விசாரணை குறித்த ஆவணங்களை ஒரு வாரத்தில் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
2021-23 காலகட்டத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்காக 28 ஆயிரம் மின் மாற்றிகளை கொள்முதல் செய்ததன் மூலமாக அரசுக்கு இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் டான்ஜெட்கோ தலைவரும் நிர்வாக இயக்குநருமான ராஜேஷ் லக்கானி உள்ளிட்டோருக்கு எதிராக உயர் நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரிக்கக் கோரி அறப்போர் இயக்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
மின்மாற்றிகள் கொள்முதல் செய்யப்பட்டது தொடர்பான ஒப்பந்த ஒதுக்கீடு ஆவணங்களையும், முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் நடைபெற்று வரும் ஆரம்ப கட்ட விசாரணை குறித்த ஆவணங்களையும் தாக்கல் செய்ய வேண்டும், என லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


