ஏஐ அச்சத்தால் ஐடி பங்குகள் சரிவு.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் வீழ்ச்சி!

இன்றுகாலை வர்த்தகத்தில் இந்தியப் பங்குச்சந்தை பெரும் சரிவை சந்தித்தது. மதியம் 12:30 மணி நிலவரப்படி, பிஎஸ்இ சென்செக்ஸ் 1,010 புள்ளிகள் சரிந்து 82,283 ஆகவும், நிஃப்டி 287 புள்ளிகள் சரிந்து 25,425 ஆகவும் வர்த்தகமானது. குறிப்பாக ஐடி துறை பங்குகள் 3% க்கும் மேல் சரிந்ததே இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாகும்.

 

அமெரிக்காவின் ஆந்த்ரோபிக் நிறுவனம் வெளியிட்ட புதிய ஏஐ கருவிகள், இந்திய ஐடி நிறுவனங்களின் எதிர்கால வருவாயை பாதிக்கும் என்ற அச்சம் முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

 

இன்ஃபோசிஸ், டிசிஎஸ், ஹெச்சிஎல் போன்ற முன்னணி நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவை சந்தித்தன. மேலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள வர்த்தக வரி குறித்த நிச்சயமற்ற நிலையும் உலகளாவிய சந்தைகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

நிஃப்டி 25,450 நிலைக்குக் கீழ் சென்றால், அது மேலும் வீழ்ச்சியடையக்கூடும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.


Edited by Siva

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.