ஒரு தலை காதல்; வீடு புகுந்து இரட்டை கொலை செய்த இளைஞர் - கோவையில் அதிர்ச்சி சம்பவம்

கோவை மாவட்டம், நெகமம் அருகே உள்ள கொண்டே கவுண்டன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூபதி. மெக்கானிக் வேலை செய்கிறார். இவருக்கு கலையரசி என்ற மனைவியும்,18 வயது மற்றும் 16 வயதில் 2 மகள்கள் உள்ளனர். நேற்று இரவு பூபதி வேலைக்கு சென்றுள்ளார்.

அபிஷேக்

2 மகள்கள், கலையரசி பாட்டி மயிலாத்தாள் வீட்டில் இருந்தனர். அந்த நேரத்தில் அதே பகுதியைச் சேர்ந்த அபிஷேக் (24)  என்கிற இளைஞர் அவர்களின் வீட்டுக்குள் சென்றுள்ளார். பூபதி குடும்பத்தினருடன் அவர் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அபிஷேக் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து 16 வயது சிறுமியை சரமாரியாக தாக்கியுள்ளார். மயிலாத்தாள் அபிஷேக்கை தடுக்க முயற்சித்துள்ளார். அப்போது அபிஷேக் மயிலாத்தாளையும் கத்தியால் குத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் சிறுமியின் அக்காவும் காயமடைந்தார்.

மயிலாத்தாள்
சிறுமி

3 பேரையும் தாக்கிவிட்டு அபிஷேக் தப்பி சென்றுள்ளார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 3 பேரும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 16 வயது சிறுமியும், மயிலாத்தாளும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டனர்.

காயமடைந்த பூபதியின் மூத்த மகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து நெகமம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அபிஷேக் கடந்த 3 ஆண்டுகளாக 16 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார்.

கோவை

சிறுமியை தனக்கு திருமணம் செய்து வைக்க கோரி பூபதி குடும்பத்தினரிடம் வலியுறுத்தியுள்ளார். அதற்கு குடும்பத்தினர் மறுத்ததால் கொலை செய்தது தெரியவந்துள்ளது. தலைமறைவான அபிஷேக்கை 6 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.